azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 19 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 19 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Pray to God and draw from Him the magnet of His grace and offer to the world the power of His electrical energy. This is the energy which everyone can mobilise for common good. It is all-powerful, because it is divine. It is within you. What a pity that people should be unaware of this and feel themselves powerless! All energy and all bliss are within us. It is because of ignorance that people are resorting to all kinds of useless and unnecessary exercises. Have full faith in your spiritual power (Atma-shakti). Adhere to the truth of your faith, without criticising others. Open your hearts and close your mouths. Today people are doing exactly the opposite. Practise silence as far as possible. The one who talks much will do little. One who acts will talk little. Whatever you do, have the name of the Lord on your lips and faith in God in your heart. Thereby work will be transformed into worship. (Divine Discourse, Mar 08, 1997.)
YOU ARE AN ASPECT OF THE DIVINE, WHO IS THE SUPREME EMBODIMENT OF LOVE. - BABA
இறைவனைப் பிரார்த்தித்து, அவனிடமிருந்து ,இறை அருள் எனும் காந்த சக்தியைப் பெற்று, இந்த உலகிற்கு அவனது மின் சக்தியை அளியுங்கள். பொது நன்மைக்காக, ஒவ்வொருவரும் சேகரிக்கக் கூடிய சக்தி இதுவே. அது தெய்வீகம் ஆதலால், ஸர்வ வல்லமையும் படைத்ததாகும். அது உங்களுள்ளேயே இருக்கிறது. இதை அறியாமல், மனிதர்கள், தங்களை சக்தியற்றவர்களாகக் கருதுவது எவ்வளவு வருந்தத் தக்கது ! அனைத்து சக்தியும், ஆனந்தமும் நம்முள்ளேயே இருக்கிறது. அறியாமையினால் தான் மனிதர்கள் பல விதமான பயனற்ற மற்றும் தேவையில்லாத பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள். உங்களது ஆத்ம சக்தியில் முழு நம்பிக்கை வையுங்கள். பிறரை விமரிசிக்காது, உங்களது மத நம்பிக்கையின் சத்தியத்தைப் பற்றி ஒழுகுங்கள். இதயங்களைத் திறவுங்கள், உங்களது வாய்களை மூடிக் கொள்ளுங்கள். இன்று மனிதர்கள் இதற்கு நேர் மாறாகச் செய்கிறார்கள். முடிந்த அளவு மௌனத்தைக் கடைப்பிடியுங்கள். அதிகம் பேசும் ஒருவர், செயல் ஆற்றுவது மிகக் குறைவே. செயலாற்றுபவர், குறைவாகவே பேசுவார். நீங்கள் எதைச் செய்தாலும், இறை நாமத்தை உங்கள் உதடுகளிலும்,இறை நம்பிக்கையை, உங்கள் இதயத்திலும் கொண்டிருங்கள். அதன் மூலம் பணியே, பிரார்த்தனையாக மாறி விடும்.
நீங்கள் ,ப்ரேமையின் உன்னதத் திரு உருவான, தெய்வீகத்தின் ஒரு அம்சமே - பாபா