azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 17 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 17 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
There are many, maybe a few lakhs or crores, who call themselves devotees of Sai. Even if one Sai devotee practices sacrifice and truth, the whole world would become a better place. Truth and spirit of sacrifice are the two primary principles that are necessary to change the world. Truth sanctifies the heart, and the sense of sacrifice leads us to the renunciation of the worldly. Through these two, one can experience the import of the statement, Antar bahischa tat sarvam vyapya Narayana stitaha - The Lord pervades all space, within and without. In the absence of this true knowledge people indulge in the worldly and transient things from birth till death. How then can they redeem themselves and attain liberation? Every individual must love God to redeem their lives. You are endowed with a body only to practice righteousness. Do not lead an idle life. (Divine Discourse, Mar 08, 1997)
THE HEART IS LIKE A VESSEL. FILL IT WITH QUALITIES OF TRUTH, LOVE AND SACRIFICE. - BABA
பலர், ஏன் லக்ஷக்கணக்கான அல்லது கோடிக் கணக்காணவர்கள், தங்களை சாய் பக்தர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். ஒரு சாய் பக்தராவது, தியாகத்தையும், சத்தியத்தையும் கடைப் பிடித்தால் கூட, இந்த உலகம் ஒரு மேம்பட்டதாக ஆகி விடும்.சத்தியமும், தியாக உணர்வுமே, இந்த உலகத்தை மாற்றுவதற்குத் தேவையான இரண்டு முன் முதல் கோட்பாடுகளாகும். சத்தியம், இதயத்தைப் பரிசுத்தமாக்குகிறது; தியாக உணர்வு, உலகியலானவற்றில் பற்றின்மைக்கு இட்டுச் செல்கிறது. இந்த இரண்டின் மூலமும், ஒருவர் , ‘’ அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித: ‘’ – அதாவது , இறைவன் உள்ளும், புறமும் உள்ள அனைத்திலும் வியாபித்துள்ளான் – என்ற கூற்றின் பொருளை அனுபவிக்க முடியும். இந்த உண்மையான ஞானம் இல்லாமையால், மக்கள், பிறப்பிலிருந்து, இறப்பு வரை உலகியலான மற்றும் நிலையற்ற விஷயங்களில் ஈடுபடுகிறார்கள்.பின் அவர்கள் எவ்வாறு தங்களை மீட்டுக் கொண்டு, மோக்ஷத்தை அடைய முடியும்? தங்களது வாழ்க்கைகளை, புனிதமாக்கிக் கொள்ள ஒவ்வொருவரும் இறைவனை நேசிக்க வேண்டும். தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்காகவே, உங்களுக்கு ஒரு உடல் கொடுக்கப் பட்டுள்ளது. சோம்பேறித்தனமான வாழ்க்கையை நடத்தாதீர்கள்.
இதயம் ஒரு பாத்திரம் போன்றது. அதை, சத்யம்,ப்ரேமை,
தியாகம் போன்ற குணங்களால் நிரப்புங்கள் - பாபா