azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 16 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 16 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Remove all negative feelings. Develop more and more positive thoughts. Along the way some might criticise you, that’s an opportunity of transformation for you! Think this way, “My parents gave me one name, friends gave another name and others gave me a nickname! This body has many names, that’s all!” Will you become bad if someone calls you bad? No! If they call you bad, try to become free of bad qualities, if they are present in you. If someone points out a mistake, try to free yourself from that mistake if it’s there in you – that’s all!” Handle criticism gracefully. Embodiments of love! In this Kali age, when desires are not fulfilled, people start blaming even God! Don't hate anybody and don't accuse anybody; as much as possible, love all and if not possible, at least don't hate anyone. Bhagawan wants all to develop the spirit of oneness and unity. (Divine Discourse, Nov 23, 2000)
noble actions, ideal qualities and sacred thoughts are the basic foundation of character. - baba
அனைத்து எதிர் மறையான சிந்தனைகளையும் விட்டு விடுங்கள். நேர்மறையான சிந்தனைகளை மேன் மேலும் அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். இந்தப் பாதையில் சிலர் உங்களை விமரிசிக்கக் கூடும்: அதுவே நீங்கள் சீரடைவதற்கான வாய்ப்பாகும் ! இப்படிச் சிந்தியுங்கள், ‘’ என் பெற்றோர்கள் ஒரு பெயர் வைத்தார்கள், நண்பர்கள் வேறு ஒரு பெயுர் வைத்தார்கள், மற்றவர்கள் எனக்கு ஒரு பட்டப் பெயர் கொடுத்தார்கள் ! இந்த உடலுக்கு பல நாமங்கள், அவ்வளவு தான் !’’ யாரோ ஒருவர் உங்களைக் கெட்டவர் என்று கூறுவதால், நீங்கள் கெட்டவரராக ஆகி விடுவீர்களா? இல்லையே ! அவர்கள் உங்களைக் கெட்டவர் என்று கூறினால், உங்களுள் தீய குணங்கள் இருக்குமானால், அவை இல்லாமல் இருக்க முயலுங்கள். யாராவது, உங்களுள் ஒரு குறையைச் சுட்டிக் காட்டினால், அது உங்களிடம் இருந்தால், அதிலிருந்து விடு பட முயலுங்கள் – அவ்வளவு தான் !’’ விமரிசனத்தை, நேர்த்தியாகக் கையாளுங்கள்.ப்ரேமையின் திருவுருவங்களே! இந்தக் கலி யுகத்தில், மனிதர்கள் தங்களது ஆசைகள் நிறைவேறவில்லை என்றால், இறைவனைக் கூடக் குறை கூறுகிறார்கள் ! எவரையும் வெறுக்காதீர்கள், எவரையும் தூஷிக்காதீர்கள்; முடிந்த அளவு அனைவரையும் நேசியுங்கள்; அது முடியவில்லை என்றால், குறைந்த பட்சம் எவரையும் வெறுக்காதீர்கள். பகவான், அனைவரும் ஒருமை மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.
சீரிய செயல்கள், சிறந்த குணங்கள் மற்றும் புனிதமான சிந்தனைகளே, நற்குண நலன்களின் அஸ்திவாரம் ஆகும் - பாபா