azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 10 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 10 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Most people today are lacking in Love and so in Bliss too. When people form conflicting groups and plot to destroy each other, how can joy and peace reside in them? Ancient myths speak of wars of extermination between Gods and demons and between men and rakshasa (demons). But history today is recording wars between rakshasas who call themselves ‘human’. Why? Because, love is directed towards selfish ends. Sacrifice and charity are indulged in for the sake of self-aggrandizement. People take part in social service only in order to advertise themselves. How can the sweet contents be consumed when the bottle is tightly closed by the two corks - pomp and personal publicity? Remove these corks by the screw of selflessness. Selfless Love implies understanding, and consequently, sympathy and compassion. They will confer Ananda (Divine Bliss). To experience happiness, peace and joy you must allow the innate virtues of Love and sacrifice to emerge from within and thus sanctify your lives. [Divine Discourse, 29-Feb-1984]
ONLY WHEN YOU SHED YOUR SELFISHNESS, YOU CAN TURN YOUR MIND TOWARDS GOD. - BABA
இந்நாளில், மனிதர்கள், ப்ரேமை அற்றவர்களாகவும். அதன் காரணமாக , ஆனந்தம் அற்றவர்களாகவும் இருக்கிறார்கள். மனிதர்கள் எதிரெதிரான அணிகளை வகுத்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் அழிக்கச் சதி செய்யும் போது, சாந்தி, சந்தோஷங்கள் அவர்களுள் எவ்வாறு குடியிருக்க இயலும் ? பண்டைய இதிஹாஸங்கள் , தேவர்கள், அசுரர்களுக்கு இடையிலும், மனிதர்கள், அசுரர்களுக்கு இடையிலும் நிகழ்ந்த இன அழிப்புப் போர்களைப் பற்றிக் கூறுகின்றன. ஆனால், இன்றைய வரலாறு, தங்களை ‘’ மனிதர்கள்’’ என்று கூறிக் கொள்ளும் அசுரர்களுக்கு இடையில் நிகழும் போர்களைப் பதிவு செய்து கொண்டு இருக்கிறது. ஏன்? ப்ரேமை, சுயநல நோக்கங்களைக் குறித்து செலுத்தப் படுகிறது. தானமும், தர்மமும், சுய டாம்பீகத்திற்காகச் செய்யப் படுகின்றன . தங்களை விளம்பரப் படுத்திக் கொள்வதற்காக, மக்கள் , சமூக சேவையில் பங்கேற்றுக் கொள்கிறார்கள். படாடோபம் மற்றும் சுய விளம்பரம் என்ற இரண்டு மூடிகளால், ஒரு பாட்டில், இறுக மூடி இருக்கும் போது, அதில் உள்ள இனிமையானவற்றை எவ்வாறு அருந்த முடியும் ? இந்த இரண்டு மூடிகளையும், தன்னலமின்மை என்ற ஸ்குரூவைக் கொண்டு நீக்குங்கள். தன்னலமற்ற ப்ரேமை என்பது புரிதலையும், அதன் விளைவாக கனிவையும், கருணையையும் எடுத்துக் காட்டுகிறது. அவை பேரானந்தத்தை அளிக்கும். மகிழ்ச்சி, சாந்தி மற்றும் சந்தோஷங்களை அனுபவிக்க, நீங்கள் உள்ளார்ந்த நற்குணங்களான ப்ரேமை மற்றும் தியாகத்தை உள்ளிருந்து வெளிப்பட அனுமதித்து, உங்களது வாழ்வைப் புனிதமாக்கிக் கொள்ள வேண்டும்.
நீங்கள் உங்களது சுயநலத்தை விட்டால் மட்டுமே, உங்களால்,
உங்கள் மனதை இறைவனை நோக்கித் திருப்ப முடியும் - பாபா