azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 09 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 09 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Of what avail is the study of the Upanishads and the Gita if there is no transformation in our thoughts or way of life? You must examine where all your spiritual practices are leading you to. There must be an urge to change and progress towards a higher state of consciousness. In reality all are embodiments of Sat-chit-ananda (Truth-Consciousness-Bliss)! Your real ‘I’ exists in all the stages of waking, dream and deep sleep. But in dream and deep sleep states you are not conscious of your body. The entity that exists in all three states undergoes no change. You must try to understand the nature of this ‘I’. You may regard this as extremely difficult, but if you have dedication and perseverance, it will be quite easy. There is nothing in the world easier than the spiritual path. But when there is no earnestness, it appears difficult. Hence Gita declared: Shraddhavan labhate Jnanam (The earnest aspirant acquires the Supreme Wisdom). [Divine Discourse, Feb 16, 1988]
CONSTANTLY REMIND YOURSELF, “I AM THE EMBODIMENT OF DIVINE CONSCIOUSNESS”. - BABA
நம்முடைய சிந்தனைகள் அல்லது வாழ்க்கை முறையில் நல் மாற்றம் வரவில்லை என்றால், உபநிஷதங்களையும், ஸ்ரீமத் பகவத் கீதையையும் படிப்பதால் என்ன பயன்? உங்களது ஆன்மீக சாதனைகள் அனைத்தும் உங்களை எங்கு இட்டுச் செல்லுகின்றன என்பதை நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும். மாற்றத்திற்கும், ஒரு உயர்ந்த உணர்வு நிலையை நோக்கி முன்னேற வேண்டும் என்பதற்கும், ஒரு உந்துதல் இருக்க வேண்டும். உண்மையில் அனைவரும் சச்-சித்-ஆனந்த ஸ்வரூபமே. உங்களது உண்மையான , ‘’ நான்’’ என்பது, விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்ற அனைத்து நிலைகளிலும் இருக்கின்றது. ஆனால் கனவு மற்றும் ஆழ்ந்த உறக்க நிலையில், உங்களுக்கு, உடலைப் பற்றிய உணர்வு இருப்பதில்லை. இந்த மூன்று நிலைகளிலும் இருக்கும் உட்பொருள் எந்த மாற்றமும் அடைவதில்லை. இந்த ‘’ நான்’’ என்பதன் தன்மையை, புரிந்து கொள்ள, நீங்கள் முயல வேண்டும். இது மிகவும் கடினமானது என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால் உங்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வும், விடாமுயற்சியும் இருக்குமானால், இது மிகவும் எளிதானதே. ஆன்மீகப் பாதையை விட எளிதானது இந்த உலகில் எதுவும் இல்லை. ஆனால், எங்கு உறுதியான உள்ளார்வம் இல்லையோ, அங்கு அது கடினமானதாகத் தோன்றுகிறது. எனவே தான் ஸ்ரீமத் பகவத் கீதை,‘’ஸ்ரத்தாவான் லபதே ஞானம்‘’ அதாவது சிரத்தை உள்ளவனே ஞானத்தைப் பெறுவான் என்று பறைசாற்றுகிறது.
‘’நான் பரமாத்ம ஸ்வரூபமே ‘’ என இடையறாது, உங்களுக்கு நீங்களே நினைவூட்டிக் கொள்ளுங்கள் - பாபா