azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 06 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 06 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Lord Dakshinamurthy was walking along a wide seashore alone, immersed in deep meditation. He saw a dry little twig on the crest of a wave in the distance being passed on from one wave to another, from trough to crest, from crest to trough, until it was cast on the sands on the shore. He was astounded at the egoism of the Ocean that would not give asylum to even a tiny twig. Sensing His reaction, the Ocean declared, in words that He could understand, "Mine is neither egoism nor anger; it is only the duty of self-preservation. I should not allow the slightest blot to deface my grandeur. If I allow this twig to mar my splendour, it will be the first step in my downfall." Then, Dakshinamurthy smiled admiring the vigilance of the mighty Ocean. He pictured the incident as a great lesson in spiritual endeavour. The slightest twig of desire, if it falls on the mind, has to be immediately lifted out of the pure waters and thrown off. That was the lesson to be learnt. ( Divine Discourse, Jul 29, 1969.)
பகவான் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி , ஆழ்ந்த தியானத்தில் லயித்தவாறே, ஒரு பரந்த கடற்கரையின் பக்கமாக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர், ஒரு சிறிய உலந்த மரக்குச்சி, தூரத்தில் ஒரு அலையின் மீது, ஒரு அலையிலிருந்து மற்றொரு அலைக்கும், அலையின் மேலும் , கீழும், கீழும் மேலுமாக அடித்துச் செல்லப் பட்டு, கடைசியில், கரையின் மணல் பரப்பில் , வீசி எறியப் படுவதைக் கண்டார். ஒரு சிறிய மரக்கிளைக்குக் கூட, அடைக்கலம் கொடுக்காத, சமுத்திரத்தின் அஹங்காரத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அவரது இந்த சிந்தனையை உணர்ந்த, சமுத்திர ராஜன், அவர் புரிந்து கொள்ளக் கூடிய வார்த்தைகளில், ‘’ என்னுடையது அஹங்காரமோ அல்லது கோபமோ அல்ல; இது எனது தற்காப்பாக்குக் கடமையாகும். நான் ஒரு சிறிய கறையைக் கூட எனது மஹிமையைக் களங்கப் படுத்த அனுமதிக்கக் கூடாது. நான் இந்தக் குச்சியை எனது மகத்துவத்தைக் களங்கப் படுத்த விட்டேன் என்று சொன்னால், அதுவே எனது வீழ்ச்சியின் முதல் படியாக ஆகி விடும் ‘’ என்று கூறினாராம். பின்னர், பகவான் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, இந்த மஹா சமுத்திரத்தின் கண்காணிப்பு உணர்வைக் கண்டு, வியந்து பாராட்டி,புன்னகை புரிந்தாராம். அவர் இந்த சம்பவத்தை, ஆன்மீக சாதனையின் ஒரு மகத்தான பாடமாகக் கண்டார். ஒரு சிறிய ஆசை எனும் குச்சி கூட, மனதில் விழுந்தால், அதைத் தூய நீரிலிருந்து உடனே எடுத்துத் தூக்கி எறிந்து விட வேண்டும். அதுவே , நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.