azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 05 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 05 Feb 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

One discipline everyone of you must heed is the control of the senses; if you give them free rein, they will drag you into calamity. Education must render you monarch of your talents which are your tools for acquiring knowledge. The eye, the ear and the tongue are wild horses. Learn the art of meditation (dhyana) by which the senses can be controlled and the will directed inwards, towards the mastery of feelings and emotions. You must learn also how to steer clear of hatred, malice, greed, anger, anxiety, pride and other obstacles that come in the way of inner peace. It is not enough if your home budget is balanced; you must learn the art of having a balanced view of life, which does not get affected by triumphs and troubles, gains or losses, victory or defeat. This balance can be got only by reliance and faith in the in-dwelling God. [Divine Discourse, Jun 26, 1969]
THE PROPER FULFILMENT OF DUTIES IS PART OF THE SPIRITUAL DISCIPLINE
NECESSARY FOR GETTING ENLIGHTENMENT. - BABA
நீங்கள் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டிய கட்டுப்பாடு, புலனடக்கமே; நீங்கள் புலன்களைத் தன்னிச்சையாக செல்ல விட்டால்,அவை உங்களை அழிவிற்கு இழுத்துச் சென்று விடும். அறிவைப் பெறுவதற்கான கருவிகளான உங்களது திறன்களுக்கு, கல்வி, உங்களை அதிபதியாக்க வேண்டும். கண், காது மற்றும் நாக்கு, தறிகெட்டு ஓடும் குதிரைகளாகும். புலன்களைக் கட்டுப் படுத்த வல்ல, தியானக் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்; உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் அடக்கி ஆளுவதற்கு ஏற்ப, உங்களது ஸங்கல்பத்தை, உள்நோக்கிச் செலுத்துங்கள். த்வேஷம், வன்மம், பேராசை, கோபம், கலக்கம், தற்பெருமை மற்றும், மனச்சாந்திக்கு இடையூறு செய்யும் பிற தடைகளிலிருந்து எவ்வாறு விலகி இருப்பது என்பதையும் கற்றுக் கொள்ளுங்கள். உங்களது இல்லக் கணக்கு வழக்கு மட்டும் சமன் செய்யப் பட்டால் போதாது; சாதனைகள் மற்றும் சோதனைகள், லாபங்கள் மற்றும் நஷ்டங்கள், வெற்றி அல்லது தோல்வி ஆகியவற்றால் பாதிக்கப்படாமல், வாழ்க்கையைப் பற்றிய உங்களது நோக்கும், சமனாக இருக்குமாறு வைத்துக் கொள்ளும் கலையையும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த சமச்சீரான நிலையை, உள்ளுறையும் தெய்வத்தைச் சார்ந்தும், நம்பியும் இருந்தால் மட்டுமே பெற முடியும்.
கடமைகளை, முறையாக ஆற்றுவது, ஆத்ம சாக்ஷாத்காரத்தை அடைவதற்கான ஆன்மீக சாதனையின் ஒரு அங்கமே- பாபா