azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 21 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 21 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
The human body, fully loaded with skills, and so capable of great adventures is a gift from God to you. Use it as a raft to cross this never-calm ocean of change (samsara) that lies between birth and death, bondage and liberation. Wake up to this primal duty when your physical and mental faculties are keen and when your power of discrimination is sharp. Do not postpone the ride on the raft, for it may become burdened with illness soon, and all your attention will have to be spent on its upkeep. Think of the incomparable joy that will surge within you when you reach the shore of liberation! Ride safe on the raging waters of worldly life; be a witness, do not crave for the fruit of action, and leave the consequences of all acts to God's will. He is the doer; you are His instrument. Practice spiritual discipline and be unaffected by defeat or victory, and establish yourself in unruffled peace. (Divine Discourse, Jul 4, 1968)
HAVE NO DESIRES TO PLACE BEFORE GOD, FOR, WHATEVER HE DOES WITH YOU,
AND HOWEVER HE TREATS YOU IS THE GIFT HE LIKES BEST TO GIVE YOU! - BABA
திறன்கள் நிரம்பிய, தலை சிறந்த சாதனைகள் சாதிக்க வல்ல , இந்த மனித உடல், இறைவன் உங்களுக்கு அளித்த பரிசாகும். பிறப்பிற்கும், இறப்பிற்கும், பந்தத்திற்கும், மோக்ஷத்திற்கும் இடையே இருக்கும், இந்த அமைதியே அற்ற ஸம்ஸார சாகரத்தைக் கடக்க வல்ல தோணியாக இதைப் பயன்படுத்துங்கள். உங்கள் உடல் மற்றும் மனத் திறன்கள் ஆர்வத்துடனும், உங்கள் புத்தி, கூர்மையாகவும் இருக்கும் போதே, இந்தத் தலையாய கடமையை ஆற்ற விழித்தெழுங்கள். இந்தத் தோணியில் பயணிப்பதைத் தள்ளிப் போடாதீர்கள்; ஏனெனில், இது வெகு விரைவில் வியாதிகளால் நிறைந்து, உங்கள் கவனம் அனைத்தும், அதைப் பராமரிப்பதிலேயே செலவிட வேண்டி, வந்து விடக் கூடும். மோக்ஷத்தின் கரையை அடைந்தவுடன் உங்களுள் பொங்கி எழப் போகும் இணையற்ற ஆனந்தத்தை எண்ணிப் பாருங்கள் ! ஸம்ஸார சாகரத்தின் சீறி எழும் தண்ணீரில் பத்திரமாகப் பயணியுங்கள்; ஒரு சாக்ஷியாகவும், செயல்களின் பலனுக்காக ஏங்காமலும், அனைத்து செயல்களின் விளைவுகளை இறைவனது ஸங்கல்பத்திற்கே விட்டு விட்டும் இருங்கள். செயலாற்றுபவன் அவனே; நீங்கள் அவனது கருவியே.ஆன்மீக சாதனையைக் கடைப்பிடித்து, வெற்றி அல்லது தோல்வியால் பாதிக்கப் படாமல், கலக்கமற்ற சாந்தியில் நிலை கொண்டிருங்கள்.
இறைவன் முன் வைக்க வேண்டும் என்று எந்த ஆசையையும் வைத்துக் கொள்ளாதீர்கள்; ஏனெனில்,அவன் உங்களை என்ன செய்தாலும்,உங்களை எப்படி நடத்தினாலும், அதுவே அவன் உங்களுக்கு வழங்க விரும்பும் மிகச் சிறந்த பரிசாகும் - பாபா