azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 20 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 20 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Celestial spheres are revolving and disintegrating. Time is fleeting. Age follows age. Era succeeds era. Bodies that have taken birth, grow and end. But the urge to sanctify life with good works and good thoughts is nowhere evident. The fragrance of sincere spiritual practice (sadhana) is not found anywhere in the present times. Through the process of 'giving up’, great things can be achieved. Cultivate detachment, and the Lord will attach Himself to you. The past is beyond recovery; those days are gone. But tomorrow is coming towards you. Resolve to sanctify it with Love, Service and Sadhana. Love, adore and serve the Almighty Lord (Sarveshwara) who is resident in all mankind and through that realise Him. That is the highest Sadhana. Serve every being as God. Give food to the hungry, food that is the gift of Goddess Nature; give it with love and humility. Give it, sweetened with the name of the Lord. (Divine Discourse, Mar 29, 1968)
விண் கோளங்கள், சுழன்று கொண்டும், சிதைந்து கொண்டும் இருக்கின்றன. நேரம் கரைந்து கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தை மற்றொரு காலம் தொடர்கிறது. ஒரு சகாப்தத்தை மற்றொரு சகாப்தம் தொடர்கிறது. உடல்கள் பிறவி எடுத்து, வளர்ந்து,முடிவடைகின்றன.ஆனால், நற்செயல்கள் மற்றும் நற்சிந்தனைகளால், வாழ்க்கையைப் புனிதமாக்கிக் கொள்வது என்பது எங்கும் வெளிப்படவில்லை. தற்காலத்தில், ஆத்மார்த்தமான ஆன்மீக சாதனையின் சுகந்தம் எங்குமே காணப்படவில்லை. ‘’ விட்டு விடுவது ‘’ என்ற முறையின் மூலம் மகத்தான விஷயங்களை சாதிக்க முடியும். பற்றின்மையை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள், இறைவன் தன்னையே உங்களுடன் பற்றிக் கொள்வான். கடந்த காலம் என்பது மீள முடியாத ஒன்று;அந்த நாட்கள் கடந்து விட்டன. ஆனால் நாளை, என்பது உங்களை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. அதை, ப்ரேமை,சேவை மற்றும் ஆன்மீக சாதனையின் மூலம் புனிதமாக்க ஸங்கல்பம் செய்து கொள்ளுங்கள்.மனித குலம் அனைத்திலும் உறையும் ஸர்வேஸ்வரனை நேசித்து,போற்றி, அவனுக்கு சேவை ஆற்றுங்கள்; அதன் மூலம் அவனை உணருங்கள். அதுவே தலைசிறந்த ஆன்மீக சாதனையாகும்.ஒவ்வொரு ஜீவராசியையும், தெய்வமாகக் கருதி சேவை ஆற்றுங்கள். பசியால் வாடுவோருக்கு, இயற்கை அன்னையின் பரிசான, உணவை அளியுங்கள்; அதை ப்ரேமையோடும் , பணிவோடும் , இறை நாமத்தின் இனிமையைக் கலந்து அளியுங்கள்.