azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 16 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 16 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Develop the quality of love. Do not hate anybody. Develop the faith that whatever happens is for your own good. Whenever you encounter any difficulty or suffering, you alone are responsible for it. Respect others. That alone will protect you. On the other hand, if you insult somebody that act will punish you. Pleasure and pain are the products of your own making. The merit or sin committed by you will follow you like a shadow. People today love to give sermons to others. But they are not following their own precepts. What value will such teachings have? All this is mere deception. Whatever teachings you may read or listen to, can never help you if you do not put them into practice. Help your fellow human beings at least in a small measure. That alone will help you. Do not blame others for the difficulties you face. Do not ever abuse others. Love all. [Divine Discourse, Jan 1, 2004]
ப்ரேமை குணத்தை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள்.எவரையும் வெறுக்காதீர்கள். எது நடந்தாலும் அது உங்களது நன்மைக்கே என்பதில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த கஷ்டத்தையோ அல்லது துன்பத்தையோ எதிர் கொள்ள நேரிட்டால், நீங்கள் மட்டுமே அதற்குப் பொறுப்பாவீர்கள். பிறரை மதியுங்கள்.அது ஒன்றே உங்களை பாதுகாக்கும். அதற்கு பதிலாக, நீங்கள் யாரையாவது அவமதித்தால், அந்தச் செயல் உங்களையே தண்டிக்கும். இன்பமும், துன்பமும் நீங்களே செய்து கொண்டதன் விளைவுகளே. நீங்கள் செய்த புண்ணியம் அல்லது பாவம் , உங்களையே ஒரு நிழல் போலத் தொடரும். மக்கள் இன்று பிறருக்கு போதிப்பதை விரும்புகிறார்கள். ஆனால், அவர்களது சொந்த போதனைகளை அவர்களே பின்பற்றுவதில்லை.இப்படிப் பட்ட போதனைகளுக்கு என்ன மதிப்பு இருக்கும்? இவை அனைத்தும் வெறும் ஏமாற்று வித்தையே. நீங்கள் படிக்கும் அல்லது கேட்கும் எந்த போதனைகளும், நீங்கள் அவற்றைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், அவை உங்களுக்கு ஒருபோதும் உதவ முடியாது. உங்களது சக மனிதர்களுக்கு குறைந்த பட்சம் ஒரு சிறிதளவாவது உதவுங்கள்.அது ஒன்றே உங்களுக்கு உதவி புரியும். நீங்கள் எதிர் கொள்ளும் துன்பங்களுக்கு பிறரை குறை கூறாதீர்கள். ஒருபோதும் பிறரை தூஷிக்காதீர்கள். அனைவரையும் நேசியுங்கள்.