azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 13 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 13 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Today people talk harsh words which hurt the feelings of others. If you see inappropriate sights, listen to bad talk, and indulge in unholy activities, you are investing time in activities which ultimately ruin you. When you misuse your senses, how can you expect to be happy and healthy? In order to enjoy perfect health, you must make sacred use of your senses. You may be a pauper or a millionaire, but God has given each one of you five senses and a heart (hridaya). Make proper use of them and sanctify your lives. That heart which is filled with compassion (daya) is hridaya. As you think, so you become (Yad bhavam tad bhavati). In order to sanctify your senses, you should utilise them in the service of others. If you cannot undertake any service activity, at least speak softly and sweetly. You cannot always oblige, but you can speak always obligingly. [Divine Discourse, Jan 19, 2002]
இன்று மக்கள், பிறரது உணர்வுகளைப் புண்படுத்தும் கடுமையான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். நீங்கள் தகாதவற்றைப் பார்த்தாலோ, தீய பேச்சுக்களைக் கேட்டாலோ, புனிதமற்ற செயல்களில் ஈடுபட்டாலோ, நீங்கள் உங்களை இறுதியில் அழிவிற்குக் கொண்டு சேர்க்கும் செயல்களில் உங்களது நேரத்தைச் செலவிடுகிறீர்கள் என்றே ஆகும். உங்களது புலன்களைத் தவறாகப் பயன்படுத்தி விட்டு, நீங்கள் சந்தோஷமாகவும், ஆரோக்யமாகவும் இருக்கலாம் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும் ? பரிபூரணமான ஆரோக்யத்தை அனுபவிப்பதற்கு, நீங்கள் உங்கள் புலன்களை, புனிதமான வழிகளில் பயன் படுத்த வேண்டும். நீங்கள் பாமரராகவோ அல்லது பணக்காரராகவோ இருக்கலாம்; ஆனால், இறைவன் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து புலன்களையும், ஒரு இதயத்தையும் கொடுத்துள்ளான். அவற்றை முறையாகப் பயன்படுத்தி, உங்களது வாழ்க்கையைப் புனிதமாக்கிக் கொள்ளுங்கள். தயையினால் ( தயா ) நிரம்பிய இதயமே, ஹ்ருதயா. உங்கள் எண்ணம் எப்படியோ, நீங்கள் அப்படியே ( யத் பாவம் தத் பவதி). உங்கள் புலன்களைப் புனிதப் படுத்த, நீங்கள் அவற்றை பிறரது சேவையில் பயன்படுத்த வேண்டும். உங்களால் எந்த சேவைப் பணியும் செய்ய இயலவில்லை என்றால்,குறைந்த பட்சம், இதமாகவும், இனிமையாகவும் பேசுங்கள். உங்களால் எப்போதும் உதவ முடியாமல் போகலாம், ஆனால், நீங்கள் எப்போதும் இதமாகப் பேசலாமே !