azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 08 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 08 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
The root-cause of all discontentment is envy. You can be self-satisfied only when envy is eradicated from your heart. The contented individual enjoys peaceful living. How does envy arise? Discontent over what one lacks gives birth to envy. For example, when you compare yourself with those who are better off, or hold higher office, or score higher marks, or are more good looking, you suffer from a consciousness of your own inferiority! It is a crime to entertain envy within. To get rid of this evil quality, look at those who are worse off than you. For instance, when you look at those who got lower marks, you can derive comfort from the fact that you have done better than them! Hence, get rid of envy by comparing yourself with those who are worse off. In due course you must develop a sense of equal-mindedness towards those who are better off and those who are worse. Such equal-mindedness is a Divine quality. (Divine Discourse, Jan 19, 1989)
அனைத்து அதிருப்திக்கும், அடிப்படைக் காரணம் அசூயையே ( பொறாமை) . உங்கள் இதயத்திலிருந்து, பொறாமையை முழுவதுமாக நீக்கினால் மட்டுமே, நீங்கள் சுய திருப்தி பெற முடியும்.திருப்தி அடைந்த மனிதன், சாந்தி மயமான வாழ்க்கையை அனுபவிக்கிறான். பொறாமை எப்படி எழுகிறது? ஒருவரிடம் உள்ள குறையைப் பற்றிய அதிருப்தியே, பொறாமையை உண்டாக்குகிறது. உதாரணமாக, நீங்கள், உங்களை விட வசதியானவர்கள் அல்லது உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் அல்லது அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அல்லது அதிக அழகாக இருப்பவர்கள் ஆகியோரோடு, உங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உங்களுடைய தாழ்ந்த நிலைமையைப் பற்றிய விழிப்புணர்வால் நீங்கள் பாதிக்கப் படுகிறீர்கள் ! தன்னுள் பொறாமையை வளர்த்துக் கொள்வது குற்றமாகும். இந்தத் தீய குணத்தை விட்டொழிக்க, உங்களை விடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களைக் கவனியுங்கள். உதாரணமாக, உங்களை விடக் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களைப் பார்க்கும் போது, அவர்களை விட நீங்கள் சிறப்பாகச் செய்து இருக்கிறீர்கள் என்பதைக் கண்டு, ஆறுதல் அடையலாம் ! எனவே, உங்களை விட மோசமான நிலையில் இருப்பவர்களோடு , உங்களை ஒப்பிடுவதன் மூலம், நீங்கள் பொறாமையை நீக்கிக் கொள்ளலாம். நாளடைவில், உங்களை விட உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்களைப் பற்றிய ஒரே சமச் சீரான மனப்பாங்கினை, நீங்கள் அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். இப்படிப் பட்ட சமச்சீரான மனப்பாங்கு ஒரு தெய்வீக குணமாகும்.