azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 03 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 03 Jan 2018 (As it appears in 'Prasanthi Nilayam')

Arjuna is also called Partha - a name applicable to all, for, it means earthly or earth-born. His struggle is a reminder to all. Arjuna was overcome by Love, which was colored with egoism and delusion. He felt that it was wrong to kill his kinsmen by slaughtering the armies ranged against him. He preferred a life sustained on alms to ruling over an empire won by the sword. This misplaced compassion, based on an unreal sense of values, attracted the Lord’s attention, who resolved to transmute it into a renunciation of attachment to the deed and its fruits. If only you cultivate a deep yearning for guidance about your appropriate Dharma, and if you surrender your will, intellect, emotions and your impulses to God, He will lead you to Himself and endow you with Supreme Bliss. In your daily living, practice cleansing your emotions, reforming your attitude and journey towards the final consummation. This should become the constant vigil of every seeker. (Divine Discourse, July 1970)
EVERY DEED YOU PERFORM MUST TAKE YOU NEARER TO GOD;
IT MUST BE A STEP IN YOUR PILGRIMAGE TO GOD. - BABA
அர்ஜூனன் பார்த்தன் என்று அழைக்கப் படுகிறான்- இந்தப் பெயர், பூமியில் உள்ள அல்லது பூமியில் பிறந்த அனைவருக்குமே பொருந்தும்.அவனது போராட்டம் அனைவருக்கும் ஒரு நினைவூட்டலே. அஹங்காரம் மற்றும் மாயையினால் கறை பட்ட அன்பால், அர்ஜூனன், ஆக்ரமிக்கப் பட்டிருந்தான். தனக்கு எதிராக அணி வகுத்திருந்த படையினரை அழிப்பதன் மூலம் தனது உற்றாரைக் கொல்வது தவறு என்று அவன் கருதினான். அவன், ஆயுதத்தால் வெல்லப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தை ஆளுவதை விட, பிச்சை எடுத்து வாழும் ஒரு வாழ்க்கையையே தேர்ந்தெடுக்க விரும்பினான். பொய்மையான பண்புகளை அடிப்படையாகக் கொண்ட, இந்த தவறான கருணை, பகவானின் கவனத்தை ஈர்த்தது; அதை அவர், கர்மா மற்றும் அதனின் பலன்களின் மீது கொண்டுள்ள பற்றினை, ஒரு துறவு நிலைக்கு மாற்ற ஸங்கல்பம் செய்து கொண்டார். உங்களுக்கே உரித்த தர்மத்தின் வழிகாட்டலுக்கான ஆழ்ந்த நாட்டத்தை வளர்த்துக் கொண்டு. உங்களது ஸங்கல்பம்,புத்தி, உணர்வுகள் மட்டும் உந்துதல்களை இறைவனிடம் நீங்கள் சமர்ப்பித்து மட்டும் விட்டீர்கள் என்றால், அவனே உங்களை, அவனிடமே இட்டுச் சென்று, உங்களுக்கு பேரானந்தத்தை அளித்திடுவான். உங்களது அன்றாட வாழ்க்கையில், உங்களது உணர்வுகளை பரிசுத்தப் படுத்துவதையும், உங்களது மனப்பாங்கினை சீர்திருத்துவதையும் கடைப்பிடித்து, இறைவனுடன் ஒன்றரக் கலக்கும் உங்களது இறுதி இலக்கை நோக்கிப் பயணியுங்கள். இதுவே, ஒவ்வொரு ஆன்மீக சாதகனின் தொடர்ந்த உபவாஸமாக இருக்க வேண்டும்.
நீங்கள் ஆற்றும் ஒவ்வொரு செயலும், உங்களை இறைவனருகில் இட்டுச் செல்ல வேண்டும்; இறைவனைக் குறித்த உங்களது தீர்த்த யாத்திரையின் ஒரு படியாக அது இருக்க வேண்டும் - பாபா