azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 30 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 30 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Make a list of all the things for which you have cried so far. You will find that you have craved only for paltry things, for momentary distinctions, and for fleeting fame. From now on, you should cry only for God, for your own cleansing and consummation. You should weep, wailing for the six cobras that have sheltered themselves in your mind, poisoning it with their venom - Lust, anger, greed, attachment, pride and malice. Quieten them as the snake charmer does with his swaying flute. The music that can tame them is the singing aloud of the name of God. And when they are too intoxicated to move and harm, catch them by the neck and pull out their fangs as the charmer does. Thereafter they can be your playthings; you can handle them as you please. When these are laid low, you will gain equanimity. You will be unaffected by honour or dishonour, profit or loss, joy or grief! (Divine Discourse, Mar 26, 1968)
THROUGH PRAYER AND CONTEMPLATION ON GOD, YOU SHOULD TRY TO
CONTROL THE EVIL QUALITIES IN YOU. - BABA
நீங்கள், இதுவரை எந்தப் பொருட்களுக்காக எல்லாம், அழுது இருக்கிறீர்கள் என்று பட்டியிலிட்டுப் பாருங்கள்.நீங்கள் ஏங்கியது எல்லாம், அற்பமான பொருட்கள்,தாற்காலிகமான கௌரவங்கள் மற்றும் நிலையற்ற புகழ் ஆகியவையே என்பதைக் காண்பீர்கள். இப்போதிலிருந்து, உங்களது தூய்மை மற்றும் முழுமைக்காக, நீங்கள் இறைவனுக்காக மட்டுமே அழ வேண்டும்.உங்களது மனதில் குடி கொண்டு,தங்களது கொடிய விஷத்தால், அதனை நச்சு மயமாக்கிக் கொண்டு இருக்கும் ஆறு நல்லபாம்புகளான காமம், க்ரோதம்,லோபம், மோஹம், மதம், மற்றும் மாத்ஸர்யங்களுக்காக ஒப்பாரியிட்டு, நீங்கள் அழ வேண்டும். அவற்றை, ஒரு பாம்பாட்டி எப்படி தனது மகுடியால் மயக்குகிறானோ, அவ்வாறு அடக்குங்கள். அவற்றை அடக்க வல்ல கானம், இறை நாமத்தை உரக்கப் பாடுவதே. எப்போது அவை நகரவும், கடிக்கவும் முடியாத அளவு மயங்கி உள்ளனவோ, அப்போது, பாம்பாட்டியைப் போல, அவற்றின் கழுத்தை இறுகப் பிடித்து, அவற்றின் விஷப்பற்களைப் பிடுங்கி விடுங்கள். அதன் பிறகு அவை உங்களது விளையாட்டு பொம்மைகளாகி விடும்; உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி அவற்றைப் பயன்படுத்தலாம். அவை கட்டுப் படுத்தப் பட்டால், நீங்கள் சமச்சீரான மனநிலையை அடைவீர்கள். அதன் பின், நீங்கள், புகழ்ச்சியோ அல்லது இகழ்ச்சியோ, லாபமோ அல்லது நஷ்டமோ,இன்பமோ அல்லது துன்பமோ, எதுவானாலும், அவற்றால் பாதிக்கப் பட மாட்டீர்கள் !
இறைவன் மீதான பிரார்த்தனை மற்றும் தியானத்தின் மூலம், உங்களுள் உள்ள தீய குணங்களைக் கட்டுப் படுத்த நீங்கள் முயல வேண்டும் -பாபா