azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 21 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 21 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
We find that even among the highly educated, few help their ageing parents and give them a fraction of the comforts they themselves command. Each one is immersed in ensuring their own standard of living. How long can you live that standard of life? A day will come when you must bid farewell to all that you have garnered with cunning and cleverness, inflicting pain and sorrow, discontent and distress on many. Service to parents, elders and the suffering gives joy and satisfaction beyond compare. Virtue and righteousness - these will bear witness on your behalf on the Day of Judgement; neither your bank account nor your income tax returns will speak for you. Now the Divine Principle is beyond your experience, because you are not ready to give your best to others, in whom also contains the self-same Principle. When you are ready to give, you are entitled to take; not until then. Love and co-operate. Help and serve. (Divine Discourse, Nov 22, 1969.)
மெத்தப் படித்தவர்களுக்கு இடையே கூட, வெகு சிலரே தங்களது வயதான பெற்றோர்களுக்கு உதவி, தாங்கள் அனுபவிக்கின்ற சௌகரியங்களில் ஒரு சிறிய பங்கையாவது அவர்களுக்குத் தருகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம்.ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதிலேயே மூழ்கி இருக்கிறார்கள். எவ்வளவு காலம் அப்படிப் பட்ட வாழ்க்கையை நீங்கள் வாழ முடியும்? கபடம் மற்றும் குயுக்தியாலும், பலரின் மீது துன்பம் மற்றும் துயரம், அதிருப்தி மற்றும் வேதனையை ஏற்படுத்தியும், நீங்கள் குவித்த அனைத்தையும் விட்டு விட்டுப் போக வேண்டிய ஒரு நாள் வரும். பெற்றோர்கள், பெரியவர்கள் மற்றும் வறியவர்களுக்கு ஆற்றும் சேவை, இணையற்ற சந்தோஷம் மற்றும் திருப்தியைத் தருகிறது. இறைவன் உங்களுக்குத் தீர்ப்பு வழங்கும் நாளில், உங்களது சீலமும், தர்மமும் உங்களுக்கு சாட்சியாகத் துணை நிற்குமே அன்றி, உங்களது வங்கிக் கணக்கோ அல்லது வருமான வரிப் படிவங்களோ உங்களுக்காகப் பேசாது. தெய்வ தத்துவம், உங்களது அனுபவத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது, ஏனெனில், உங்களது மிகச் சிறந்த திறனை , அதே தெய்வ தத்துவம் உறையும், மற்றவர்களுக்குத் தர நீங்கள் தயாராக இல்லை. கொடுப்பதற்குத் தயாராக ஆகும் போது தான், எடுத்துக் கொள்ளும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறதே அன்றி, அதற்கு முன் அல்ல. நேசித்து, ஒத்துழையுங்கள்.உதவி செய்து,சேவை ஆற்றுங்கள்.