azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 10 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 10 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Every morning ask yourself this question: "What is the grand victory I must strive for in this life, for which these struggles are preparing me? Remind yourself that your body is the chariot, intellect (buddhi) is the charioteer, desires are the roads which you tread drawn by the rope of sensual attachments, and liberation (moksha) is the goal; the Divine Self within should be your Guide and Goal. If you yearn to escape the consequences of birth and death, cleanse your mind so effectively that it is nearly eliminated! This is possible only when you identify yourself with the Indweller within you (Dehi), rather than with the body (Deha)! Your body is the casket of the Atma, earned as a reward for one’s activities of mind and body. When you live in the consciousness of the omnipresent Divine, you live in love - love surging within and through you, to everyone around you. You will naturally experience love, peace and joy, always! (Divine Discourse, Jan 13, 1969.)
MANY PEOPLE YEARN FOR JOY, BUT THEY ACCEPT AS GENUINE,
THE COUNTERFEIT JOY GIVEN BY THE SENSES! - BABA
ஒவ்வொரு நாள் காலையிலும் உங்களை நீங்களே, ‘’இந்த போராட்டங்கள் என்னைத் தயார்ப்படுத்தும், எந்த தலைசிறந்த வெற்றிக்காக, நான் இந்த வாழ்க்கையில் போராட வேண்டும்?’’ என்று கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் உடலே ஒரு தேர்,புத்தியே தேரோட்டி, ஆசைகளே, உங்களது புலன்களின் பற்றுதல்கள் என்ற கயிறால் நீங்கள் இழுத்துச் செல்லப்படும் பாதை, மோக்ஷமே உங்களது குறிக்கோள் என்பதையும், உங்களுள் உறையும், தெய்வீக ஆத்மாவே உங்களது குருவாகவும், குறிக்கோளாகவும் இருக்க வேண்டும் என்பதையும், நினைவு படுத்திக் கொள்ளுங்கள். பிறப்பு மற்றும் இறப்பு என்ற சுழர்ச்சியிலிருந்து தப்பிக்க நீங்கள் ஏங்கினால்,உங்கள் மனதை, ஏறத்தாழ அழித்து விடும் அளவிற்கு, பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே,உடலோடு ( தேஹா) அல்லாமல், உங்களுள் உறையும் ஆத்மோவோடு ( தேஹி) , இனம் கண்டு கொண்டால் மட்டுமே, இது சாத்தியமாகும். ஒருவரது மனம் மற்றும் உடலால் ஆற்றிய பணிகளுக்கு ஒரு பரிசாகக் கிடைத்த, உங்களது உடலே, ஆத்மா இருக்கும் பேழையாகும். அங்கிங்கெனாதபடி எங்கும் உறையும் தெய்வீகத்தைப் பற்றிய விழிப்புணர்வில் நீங்கள் வாழும்போது, உங்களுள்ளும், உங்கள் மூலம், உங்களைச் சுற்றியுள்ள அனைவர் மீதும் பொங்கி எழும், ப்ரேமையில் நீங்கள் வாழ்கிறீர்கள். நீங்கள் எப்போதும், ப்ரேமை, சாந்தி , சந்தோஷங்களை, இயல்பாகவே அனுபவிப்பீர்கள் !
பலர் ஆனந்தத்திற்காக ஏங்குகிறார்கள் ; ஆனால் புலன்கள் தரும் போலியான ஆனந்தத்தை, உண்மையானது என அவர்கள் ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள் !- பாபா