azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 09 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 09 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

The cow transforms grass and gruel into sweet strength-giving milk and gives it away in plenty to its master. Develop that quality, that power to transform the food you consume into sweet thoughts, words and deeds of compassion for all. When your heart is filled with virtues, the Lord will shower His Grace abundantly. Draupadi earned the Lord’s Grace through her devotion and virtues. Without steadfastness and depth of faith, none can receive Grace. Endeavour to earn Grace by observing the discipline that I am keen you should follow. Give up your old worldly ways of earning and spending, saving and accumulating with greed, lust, malice and pride. Do not waste time in idle gossip. Talk softly and sweetly, and talk as little as possible. Serve all as brothers and sisters adoring the Lord in them. Engage in sadhana; move every step as befits a person striving to realise God. (Divine Discourse, Jan 11, 1968)
PRACTICE SADHANA RELENTLESSLY TO DISCIPLINE YOUR MIND AND TO
DEVELOP YOUR MORAL AND MENTAL STRENGTH. - BABA
பசு, புல்லையும், கழிநீரையும், பலம் தரும் இனிமையான பாலாக மாற்றுவதோடு, அபரிமிதமாக அதை தனது ஏஜமானருக்கு அளிக்கிறது. நீங்கள் உண்ணும் உணவை, அனைவருக்கும், இனிமையான சிந்தனைகள், சொற்கள் மற்றும் பரிவான செயல்களாக மாற்றக் கூடிய சக்தியான அத்தகைய குணத்தை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். உங்கள் இதயம், நல்லொழுக்கங்களால் நிரம்பி இருக்கும் போது, இறைவன் அவனது கருணையை அளவின்றிப் பொழிவான்.திரௌபதி, தனது பக்தி மற்றும் நல்லொழுக்கங்களின் மூலம் இறைவனது அருளைப் பெற்றாள். மன உறுதியும், ஆழ்ந்த பக்தியும் இன்றி, எவரும், இறை அருளைப் பெற முடியாது. நான் விரும்பும், நீங்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப் பாட்டை, அனுசரிப்பதன் மூலம் இறை அருளைப் பெறப் பாடுபடுங்கள். பழைய உலக வழக்கங்களான பொருள் ஈட்டுவது, செலவழிப்பது, பேராசையுடன் சேமித்துக் குவித்து வைப்பது, காமம், க்ரோதம், மதம் ஆகியவற்றை விட்டு விடுங்கள். வெட்டி வம்புப் பேச்சுகளில், நேரத்தை வீணாக்காதீர்கள். இதமாக, இனிமையாக , எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவே பேசுங்கள். அனைவரையும் சகோதர, சகோதரிகளாகக் கருதி, அவர்களுள் உறையும் தெய்வத்தைப் போற்றி, சேவை ஆற்றுங்கள். ஆன்மீக சாதனையில் ஈடுபடுங்கள்; இறைவனை உணர விழையும் ஒருவருக்கு ஏற்ற முறையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்.
உங்கள் மனதைக் கட்டுப்படுத்துவதற்கும்,ஒழுக்கம் மற்றும் மன வலிமையை அபிவிருத்தி செய்வதற்கும், இடையறாத ஆன்மீக சாதனையில் ஈடுபடுங்கள்- பாபா