azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 05 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 05 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Despite the many Navaratris and Shivaratris (auspicious festivals) you attend at holy places, unless you illumine your heart and make it shine clear and pure, it will be shrouded in darkness, immersed in ratri (night) only. You may say that progress is possible only through My Grace, but though My heart is soft as butter, it melts only when there is some warmth in your prayer. Unless you make some disciplined effort and do some sadhana (spiritual activities), grace cannot descend on you. The yearning and the agony of unfulfilled aim melts My heart. That anguish (aavedana) wins grace. Sadhana must make you calm, unruffled, poised, and balanced. Your mind must be cool and comforting as moonlight, for Moon is the deity holding sway over mind. Be calm in speech, and in your responses to malice, cavilling and praise. [Divine Discourse, 13 Jan, 1969]
PRAYER ALONE MAKES LIFE HAPPY, HARMONIOUS AND WORTH LIVING IN THIS UNIVERSE. - BABA
புண்ய க்ஷேத்ரங்களில் நீங்கள் பங்கேற்ற பல நவராத்திரி மற்றும் சிவராத்திரிகளுக்குப் பிறகும், நீங்கள் உங்கள் இதயத்தில் ஒளியூட்டி, அதைத் தெளிவாகவும், பரிசுத்தமாகவும் பிரகாசிக்கச் செய்யாவிடில், அது இருளில் , அதாவது ராத்திரியில் தான் மூழ்கி இருக்கும். முன்னேற்றம் என்பது எனது அருளின் மூலம் தான் கிடைக்கும் என நீங்கள் கூறலாம்; ஆனால் எனது இதயம் வெண்ணெயைப் போல மிருதுவாக இருந்தாலும், உங்களது பிரார்த்தனையில் ஓரளவு இதமான வெதுவெதுப்பு இருந்தால் தான், அது இளகும்.நீங்கள் ஓரளவு கட்டுப் பாடான முயற்சியும், ஆன்மீக சாதனையும் செய்தால் அன்றி, இறை அருள், உங்களுக்குக் கிட்டாது. நிறைவேறாத குறிக்கோளுக்கான தாபமும், ஏக்கமுமே எனது இதயத்தை இளகச் செய்யும்.அந்த வேதனையே ( அவேதனா) இறை அருளை வெல்கிறது. ஆன்மீக சாதனை உங்களை அமைதியான, நிலைகுலையாத, கம்பீரமான சமச்சீரான ஒருவராக ஆக்க வேண்டும்.உங்கள் மனம் நிலவின் ஒளியைப் போல, குளுமையாகவும், இதமாகவும் இருக்க வேண்டும்; ஏனெனில், சந்திரனே உங்கள் மனதின் அதிபதியாவார். பேச்சிலும், வன்மம், தூற்றுதல் மற்றும் போற்றுதலுக்கு நீங்கள் அளிக்கும் பதில்களிலும், அமைதி காத்திடுங்கள்.
பிரார்த்தனை மட்டுமே, இந்த பிரபஞ்சத்தில் வாழ்க்கையை, இன்பமானதாகவும், இசைவானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகிறது - பாபா