azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 02 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 02 Dec 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Learn a lesson from the tree. When it is heavy with fruits it does not raise its head aloft in pride, it bends low, stoops, as if it does not take any credit for its accomplishment and as if it is helping you to pluck the fruit. Similarly, learn a lesson from the birds. They feed those who cannot fly far. The bird relieves the itch of the buffalo by scratching it with its beak; they help and serve each other, with no thought of reward. How much more alert must you be, than the birds and trees with your superior skills and faculties? Remember, service is the best cure for egoism, and so you must engage in it to relieve pain and grief to the extent you can. Try to assuage, as far as you can, the distress of others; when done sincerely, it is the best spiritual practice for a true spiritual aspirant. (Divine Discourse, Jan 13, 1968.)
TRUE SERVICE IS PARTICIPATING IN SOCIETY’S WELL-BEING AFTER RIDDING YOURSELF OF EGOISM,
POSSESSIVENESS AND MANIFESTING DIVINE QUALITIES OF COMPASSION AND KINDNESS. - BABA
மரத்திலிருந்து ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.எப்போது, அது பழங்களால் நிரம்பி பளுவாக இருக்கிறதோ, அப்போது, அது தனது தலையை தற்பெருமையால் உயர்த்திக் கொள்வதில்லை; மாறாக, தனது சாதனைக்காக எந்த கௌரவத்தையும் எடுத்துக் கொள்ளாதது போலவும், உங்களுக்கு பழங்களைப் பறிக்க உதவுவது போலவும், அது வளைந்து, குனிந்து கொள்கிறது. அதைப் போலவே, பறவைகளிடமிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். அதிக தூரம் பறக்க முடியாதவர்களுக்கு, அவை உணவூட்டுகின்றன. பறவையானது எருமை மாட்டின் அரிப்பை, தனது அலகுகளால் சொறிந்து நீக்குகிறது; அவை ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, எந்தப் பலனையும் பற்றிய எண்ணமே இல்லாது சேவை செய்கின்றன. பறவைகள் மற்றும் மரங்களை விட உயர்ந்த திறன்களும், திறமைகளும் கொண்ட நீங்கள் மேலும் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் ? அஹங்காரத்திற்கு, சேவையே சிறந்த மருந்து என்பதை நினைவில் கொண்டு, நீங்கள், உங்களால் முடிந்தவரை, பிறரது துன்பத்தையும், துயரையும் நீக்க , சேவையில் ஈடுபட வேண்டும். உங்களால் முடிந்த வரை மற்றவர்களது கஷ்டத்திற்கு ஆறுதல் அளிக்க முயலுங்கள்; அதை ஆத்மார்த்தமாகச் செய்யும் போது, அதுவே ஒரு உண்மையான ஆன்மீக சாதகனின் , தலை சிறந்த ஆன்மீக சாதனையாக ஆகி விடுகிறது.
அஹங்கார, மமகாரங்களை உங்களிடமிருந்து நீக்கிக் கொண்டு, தெய்வீக குணங்களாகிய பரிவையும், கனிவையும் வெளிப்படுத்தி, சமுதாய நலனில் பங்கு கொள்வதே , உண்மையான சேவையாகும்- பாபா