azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 22 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 22 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
It is essential for students to understand why morality and spirituality have disappeared from society. Education without character, science without human values, commerce without ethics, and politics without truth are responsible for the erosion of virtue. Students have a duty to develop patriotism and restore these forgotten values. Today’s education makes one clever but does not instill virtue. Students transform their heads (mastakam) into books (pustakam) without practising human values. There is no benefit in turning your head into a book or vice versa. Recognise the path of Truth and demonstrate it in day-to-day living. The world needs people imbued with integrity. All that is learned must culminate in behaviour. Life today is based on show, expenditure, and comfort. Humanity’s problems can be solved not by money or science but by humanity alone. People must transform themselves to live as human beings. (Divine Discourse, May 20, 1991.)
EDUCATION IS MEANT FOR DHARMACHARANA (PRACTICE OF RIGHTEOUSNESS) AND NOT
FOR DHANARJANA (ACQUIRING WEALTH). - BABA
நல்லொழுக்கமும்,ஆன்மீகமும், சமுதாயத்திலிருந்து ஏன் மறைந்து விட்டன என்பதை மாணவர்கள் புரிந்து கொள்வது அத்தியாவசியம். ஒழுக்கமற்ற கல்வி, மனிதப் பண்புகள் அற்ற விஞ்ஞானம், நாணயமற்ற வியாபாரம்,சத்தியமற்ற அரசியல் ஆகியவையே, நல்லொழுக்கம் தேய்ந்து விட்டதற்குக் காரணமாகும்.மாணவர்களுக்கு, தேசப்பற்றை அபிவிருத்தி செய்து கொண்டு, இந்த மறந்து விட்ட பண்புகளை புனர் நிர்மாணம் செய்ய வேண்டிய ஒரு கடமை இருக்கிறது. இன்றைய கல்விமுறை ஒருவரை புத்திசாலியாக ஆக்குகிறதே அன்றி,நல்லொழுக்கத்தைப் புகுத்துவதில்லை. மனிதப் பண்புகளைக் கடைப்பிடிக்காமல், மாணவர்கள், மூளைகளை (மஸ்தகம்), புத்தகங்களாக ( புஸ்தகம் ) மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். உங்களது மூளையை, புத்கமாகவும், புத்தகத்தை மூளையாகவும் மாற்றிக் கொள்வதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. சத்தியத்தின் பாதையை உணர்ந்து, அதை அன்றாட வாழ்க்கையில் எடுத்துக் காட்ட வேண்டும். நேர்மையில் தோய்ந்த மனிதர்கள் உலகிற்குத் தேவை.கற்றவை அனைத்தும், நடைமுறையில் கொண்டு வரப் பட வேண்டும்.இன்றைய வாழ்க்கை, படாடோபம், ஆடம்பரம் மற்றும் சௌகரியங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மனித குலத்தின் பிரச்சனைகளை, மனிதப் பண்புகளால் மட்டுமே தான் தீர்க்க முடியுமே அன்றி, பணத்தாலோ அல்லது விஞ்ஞானத்தாலோ அல்ல. மனிதர்கள், தங்களை மனிதர்களாக வாழும் வண்ணம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
கல்வி என்பது, தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்காகவே ( தர்மசரணா) அன்றி, செல்வத்தை குவிப்பதற்காக (தனர்ஜனா ) அல்ல - பாபா