azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 19 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 19 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Ladies’ Day is celebrated on this day in order to delve into the sacred qualities of women and disseminate them. Though the Earth is one, the plants vary depending upon the seeds sown. The womb of the mother symbolises Mother Earth. As is the seed of thought sown in it, so is the fruit that it yields. So the mother should foster good thoughts, words and deeds. Only then can she beget virtuous children. Aryamba was a paragon of virtues. She spent all her time in the contemplation of God and in undertaking noble deeds. As a result, Sankaracharya was born to her. Sankaracharya could become Jagadguru (world teacher) because of his mother’s virtuous thoughts. Noble souls like Vivekananda and Ramakrishna Paramahamsa could attain exalted positions in their lives only due to the sacred feelings of their mothers. It is because of the feelings of the mother that the children become good or bad. It is because of such women that the children take to the path of righteousness. (Divine Discourse, Nov 19, 2000)
IT IS THE NOBLE THOUGHTS OF THE MOTHER WHICH MAKE THE CHILDREN GREAT- BABA
பெண்களின் புனித குணநலன்களை ஆராய்ந்து அவற்றை பரப்புவதற்காக இந்த நாளில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பூமி ஒன்றுதான் என்றாலும், விதைக்கும் விதைகளைப் பொறுத்துத் தான் செடிகள் மாறுபடும். தாயின் கருப்பை, பூமித்தாயைக் குறிக்கிறது. அதில் விதைக்கப்படும் எண்ணம் எனும் விதை எப்படியோ, அது தரும் கனியும் அப்படியே. எனவே, நல்ல சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்களையே, தாய் வளர்க்க வேண்டும். அப்போதுதான் அவளுக்கு நல்லொழுக்கம் உடைய பிள்ளைகள் கிடைப்பார்கள். ஆரியம்பா நல்லொழுக்கங்களின் போற்றுதற்குரிய ஒரு உதாரணமாகத் திகழ்ந்தார். இறைச் சிந்தனையிலும், உன்னதமான செயல்களை மேற்கொள்வதிலும் அவள் தனது அனைத்து நேரத்தையும் கழித்தாள். இதன் விளைவாக, ஆதி சங்கராச்சாரியார் அவளுக்கு பிறந்தார். தனது தாயின் நற் சிந்தனைகளின் விளைவாக,சங்கராச்சாரியார் ஜகத்குருவாக (உலக ஆசிரியராக) ஆக முடிந்தது. விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற சிறந்த ஆன்றோர்கள், தங்களது தாய்மார்களின் புனிதமான உணர்வுகளால் மட்டுமே, தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடிந்தது. தாய்மார்களின் உணர்வுகளாலேயே, பிள்ளைகள் நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ ஆகிறார்கள். இது போன்ற பெண்மணிகளால் தான், பிள்ளைகள் தர்மத்தின் பாதையில் செல்கிறார்கள்.
தாயின் சீரிய சிந்தனைகளே, சிறுவர்களைச்
சிறந்தவர்களாக ஆக்குகிறது - பாபா