azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 16 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 16 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Your life is a long journey. You should have less luggage (desires) in this journey of life. Therefore, it is said: ‘less luggage more comfort, makes travel a pleasure’. You have many desires. What do you get out of them? There are rules for ceiling with regard to land and property. But is there any rule you observe to exercise a ceiling on your desires? Ceiling on desires is the need of the hour today. It means exercising control over your own desires. You can be truly happy only when your desires are controlled. You are under the mistaken notion that happiness lies in the fulfilment of desires. But in fact, happiness begins to dawn when desires are totally eradicated. Cut short your desires, day after day. When you reduce your desires, you advance very rapidly towards the state of renunciation, peace and bliss. (Divine Discourse, Mar 14, 1999.)
உங்களது வாழ்க்கை ஒரு நீண்ட நெடுந்தூரப் பயணமாகும். இந்த வாழ்க்கைப் பயணத்தில், நீங்கள் மிகக் குறைந்த அளவு சுமையையே ( ஆசைகள் ) வைத்திருக்க வேண்டும். அதனால் தான், ‘’ குறைந்த சுமை. அதிக சுகம், பயணத்தை ஒரு இனிமையானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்’’ என்று கூறப்படுகிறது. உங்களுக்குப் பல ஆசைகள் இருக்கின்றன. அவைகளிலிருந்து உங்களுக்கு என்ன கிடைக்கிறது ? நிலம் மற்றும் சொத்துக்களுக்கு என்று ஒரு உச்சவரம்பு இருக்கிறது. உங்களது ஆசைகளுக்கு ஒரு உச்சவரம்பு இருக்க வேண்டும் என நீங்கள் ஏதாவது விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறீர்களா? ஆசைகளுக்கு உச்சவரம்பு என்பதே இன்றைய தேவையாகும். உங்களது சொந்த ஆசைகளைக் கட்டுப் படுத்த வேண்டும் என்பதே இதன் பொருள். உங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே, நீங்கள் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்க முடியும்? ஆசைகள் பூர்த்தி அடைவதில் தான் சந்தோஷம் இருக்கிறது என்ற தவறான அபிப்பிராயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் , உண்மையில். ஆசைகளை முழுமையாக அழிக்கும் போது தான், சந்தோஷம் மலரத் தொடங்குகிறது. நாளுக்கு நாள், உங்களது ஆசைகளைக் குறைத்துக் கொண்டே வாருங்கள். உங்களது ஆசைகளை நீங்கள் குறைக்கும் போது, நீங்கள் துறவு, சாந்தி மற்றும் ஆனந்தம் எனும் நிலையை நோக்கி , வெகு விரைவாக முன்னேறுவீர்கள்.