azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 15 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 15 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Today there is no love between elders and youngsters in the home; children do not revere parents. This moral decline will undermine unity and strength. Moral decline is worse than military decline; it will lead to greater disaster. If you always meditate on ‘mine and me’, how can you be useful to others? Sacrifice is the 'salt' of life; it’s the secret to peace and joy. 'Go' means the senses; so, the name 'Go-pala' (one of God’s names) means, he who controls the senses. And, why should they be controlled? So that they may not stand in the way of sacrifice. All the senses are self-centred and egoistic. They must be educated to be inward-directed, towards the Universal Atma. That is gained by entrusting the senses to Gopala (God). Everyone must pass through sat-karma or good deeds, into the realm of expanding Love and from Love, learn the lesson of sacrifice, dedication and surrender to the one Overlord. (Divine Discourse, May 27, 1965.)
BE LIKE A STAR, WHICH NEVER WAVERS FROM THE CRESCENT, BUT IS FIXED, IN STEADY FAITH. - BABA
இந்நாளில், குடும்பத்தில், பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் இடையே ப்ரேமை இருப்பதில்லை; குழந்தைகள் பெற்றோரை மதிப்பதில்லை. இந்த நல்லொழுக்க வீழ்ச்சி, ஒற்றுமை மற்றும் பலத்தைப் பாதித்து விடும். நல்லொழுக்கத்தின் வீழ்ச்சி என்பது, ராணுவ வீழ்ச்சியை விட மோசமானதாகும்; இது அதிகமான பேரழிவிற்கு இட்டுச் செல்லும். நீங்கள் எப்போதும், ‘’ நான், எனது ‘’ என்பதிலேயே குறியாக இருந்தால், நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வாறு பயனுள்ளவர்களாக இருக்க முடியும் ? தியாகமே, வாழ்க்கையின் சாரம்; அதுவே சாந்தி மற்றும் சந்தோஷத்தின் ரகசியம். ‘’ கோ’’ என்றால் புலன்கள் ; எனவே, இறைவனது திருநாமங்களில் ஒன்றான ‘’ கோபாலா ‘’ என்பதற்கு, புலன்களைக் கட்டுப் படுத்துபவன் என்று பொருள். அவைகளை ஏன் கட்டுப்படுத்த வேண்டும் ? அவைகள், தியாகத்தின் பாதையில் குறுக்கிடாமல் இருப்பதற்காகவே. அனைத்து புலன்களும், சுயநலம் மற்றும் அஹங்காரம் கொண்டவை. உட்புறமாக, பரமாத்மாவை நோக்கிச் செல்லுமாறு, அவைகளுக்கு, போதிக்க வேண்டும். புலன்களை . கோபாலனிடம் ஒப்படைப்பதன் மூலம் இதை, அடைய முடியும். ஒவ்வொருவரும், நற்கருமங்களைப் புரிந்து, விசாலமான ப்ரேமையின் சாம்ராஜ்யத்தை அடைந்து. அந்த ப்ரேமையிலிருந்து தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் அந்த ஒரே இறைவனிடம் சரணாகதி ஆகியவற்றின் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பிறைச் சந்திரனிலிருந்து ஒரு போதும் வழுவாது,
ஆனால் நிலையாக இருக்கும் ஒரு நக்ஷத்திரத்தைப் போல,
உறுதியான விசுவாசத்துடன் இருங்கள் - பாபா