azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 14 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 14 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Without delving deep into the significance of all that happens around them, people lead superficial lives. If only people meditate on the reality of one’s own existence, knowledge and joy, they will establish firm contact with the Source of all existence, all knowledge and all bliss. Without taking the first step towards self-inquiry, how can one derive self-satisfaction, infinite power and wisdom? You have it in your power to make your days on earth a path of flowers, instead of a path of thorns. Recognise the Divine Resident in every heart and life will be smooth, soft and sweet. God will be the fountain of Love in your heart and in the hearts of all with whom you come in contact with. Adore everyone as you adore Sai. Allow the other person as much freedom as you like to enjoy; do unto them just as you would like to be done to you. That is the sum and substance of Sadhana. (Divine Discourse, May 11, 1975.)
DUTY MUST BE DONE WITH SKILL, SINCERITY AND SELFLESS LOVE. - BABA
தங்களைச் சுற்றி நிகழ்பவற்றின் முக்கியத்துவத்தை ஆழ்ந்து ஆராயாமல், மனிதர்கள் மேலோட்டமான வாழ்க்கை நடத்துகிறார்கள். மனிதர்கள் மட்டும், தங்களது சத், சித் மற்றும் ஆனந்தத்தின் உண்மை நிலையைப் பற்றி தியானம் செய்வார்களேயானால், அனைத்து சத், சித் ஆனந்தத்தின் மூலாதாரத்துடன் உறுதியான உறவை நிலை நாட்ட அவர்களால் முடியும். சுய ஆராய்ச்சியின் முதல் படியையே எடுத்து வைக்காமல், ஒருவர் எவ்வாறு சுயதிருப்தி, அளவற்ற ஆற்றல் மற்றும் ஞானத்தைப் பெற முடியும்? இந்த பூமியில் நீங்கள் வாழும் நாட்களை, ஒரு முள் பாதையாக இல்லாமல், ஒரு மலர் பாதையாக ஆக்கும் சக்தி உங்களுள்ளேயே இருக்கிறது. ஒவ்வொரு இதயத்தினுள்ளும் உறையும் தெய்வீகத்தை உணருங்கள்; வாழ்க்கை இடர் இன்றியும், இதமாகவும், இனிமையாகவும் இருக்கும்.இறைவன், உங்கள் இதயத்திலும், நீங்கள் தொடர்பு கொள்ளும் அனைவரது இதயங்களிலும், ப்ரேமையின் ஊற்றாக இருப்பான். சாயியைப் போற்றுவதைப் போல, அனைவரையும் போற்றுங்கள். நீங்கள் சுகமாக அனுபவிக்க விரும்பும் அதே அளவு சுதந்திரத்தை அடுத்தவருக்கும் அளியுங்கள்; நீங்கள் பிறர் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ, நீங்களும் அதையே பிறருக்குச் செய்யுங்கள். அதுவே அனைத்து ஆன்மீக சாதனையின் சாரமும் ஆகும்.
ஆற்றல், ஆத்மார்த்தம் மற்றும் தன்னலமற்ற ப்ரேமையுடன்,
கடமை ஆற்றப் பட வேண்டும் - பாபா