azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 05 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 05 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Meeting with fellow-pilgrims and kindred aspirants is a piece of rare good fortune. Every one of you is a temple, with the Lord installed in your heart, whether you are aware of it or not. The Lord is described in the Purusha Sukta scripture as ‘thousand headed’. It does not mean that He has just thousand heads and no more, no less. It means that the Lord is present in thousands of heads as just one loving heart, and gives life and energy to all! None of you must consider yourself separate from others; all of you are bound by the one same life-force, the same blood that flows through countless bodies. This is a precious message, a very special teaching of the Eternal Religion (Sanatana Dharma), which most of you have unfortunately forgotten. This is what the world needs today! Attach yourself to God fervently. Then all people on all days will be holy and special to you! (Divine Discourse, Feb 18, 1966.)
ALL ARE ONE, BE ALIKE TO EVERYONE. - BABA
சக யாத்திரீகர்களையும்,ஆன்மீக சாதகர்களையும் சந்திப்பது என்பது, ஒரு அதிருஷ்ட வசமான அரிய வாய்ப்பாகும். நீங்கள் அறிவீர்களோ இல்லையோ, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தில் இறைவன் கொலு வீற்றிருக்கும் ஒரு ஆலயமே. புருஷ ஸூக்தத்தில், இறைவன் ‘’ ஆயிரம் தலை கொண்டவன் ‘’ என்று வருணிக்கப் படுகிறான். அதைவிட ஒன்று கூட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லாமல், சரியாக ஆயிரம் தலை கொண்டவன் அவன் என்பது இதன் பொருளல்ல. அதன் பொருள், இறைவன் ஆயிரமாயிரம் தலைகளில் , ஒரே ப்ரேமை நிறைந்த இதயமாக இருந்து, உயிரையும், ஊட்டத்தையும் அனைவருக்கும் அளிக்கிறான் என்பதே ஆகும் ! உங்களில் எவரும், பிறரிடமிருந்து, உங்களை வேறுபட்டவராகக் கருதக் கூடாது; நீங்கள் அனைவருமே ஒரே ஆத்மாவாலும் , எண்ணற்ற உடல்களில் பாயும் ஒரே குருதியாலும் தான் பிணைக்கப் பட்டுள்ளீர்கள். இதுவே, உங்களில் பலர், துரதிருஷ்ட வசமாக மறந்து விட்ட , சனாதன தர்மத்தின் விலை மதிப்பற்ற, விசேஷமான ஒரு போதனையாகும். இதுவே , இன்று உலகத்தின் தேவையும் ஆகும் ! உங்களை ஆண்டவனுடன் ஆர்வத்தோடு , இணைத்துக் கொள்ளுங்கள். பின்னர், அனைவரும், என்றும், உங்களுக்கு, புனிதமான மற்றும் விசேஷமானவர்களாக ஆகி விடுவார்கள் !
அனைவரும் ஒன்றே. ஒவ்வொருவருடனும்,
ஒன்று போல நடந்து கொள்ளுங்கள் - பாபா