azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 04 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 04 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
The root-cause of all troubles is the uncontrolled and ill-directed mind. Like the river Godavari in floods, the mind rolls along, causing slips and slides and devastating vast areas on both banks. Discrimination and non-attachment are the two banks that tame the mad energy of the flood (your mind) and lead the raging waters into the sea (Divinity), which is really the destination they seek. None of you should make any attempt to run away from the duties of your station and status. Instead, remember to do those duties as worship, as offerings of your intelligence, skill, qualities, and thoughts and feelings to the feet of the Lord in a spirit of thankfulness for the chance given, without any trace of egoism or a sense of attachment to the fruits of the actions. Obligatory actions must be carried out, wherever you are, with care and sincerity. When you do so, they bestow upon you with the much-needed discrimination and non-attachment. (Divine Discourse, Apr 23, 1961)
THE ONE WHO DISCRIMINATES WELL BEFORE ENGAGING IN ANY ACTIVITY
WILL NATURALLY BE RIGHTEOUS IN CONDUCT AND BEHAVIOUR. - BABA
அனைத்து துன்பங்களுக்கும் அடிப்படைக் காரணம், கட்டுப்பாடற்ற, மற்றும் தவறாக திசை திருப்பப் பட்ட மனமே. வெள்ளப் பெருக்கெடுத்த கோதாவரி நதியைப் போல, மனமும், கரை புரண்டு ஓடி, சரிவுகளை ஏற்படுத்தி,இரு கரைகளிலும் பரந்த நிலப்பரப்பை நாசம் செய்து விடுகிறது. பகுத்தறிவும்,பற்றின்மையுமே, உங்கள் மனம் எனும் வெள்ளத்தின் பித்துப் பிடித்த சக்தியை அடக்கி, அவை நாடும் குறிக்கோளான தெய்வீகம் எனும் கடலுக்கு இட்டுச் செல்லும், இரு கரைகளாகும். தங்களது இடம் மற்றும் பொறுப்பின் கடமைகளை விட்டு விட்டு ஓடுவதற்கான எந்த முயற்சியையும், எவரும் செய்தல் கூடாது. மாறாக, இந்தக் கடமைகளை, ஒரு ஆராதனையாகவும், எந்த விதமான அஹங்காரத்தின் சுவடோ அல்லது செயல்களின் பயன்கள் மீது ஒரு பற்றுதல் உணர்வோ இன்றி, கிடைத்த வாய்ப்பிற்கான நன்றி உணர்வுடன், உங்களது புத்தி,திறமை, குணங்கள், சிந்தனைகள் மற்றும் உணர்வுகளை, இறைவனது பாதாரவிந்தங்களில் அர்ப்பணமாகவும், ஆற்றுதல் வேண்டும். நீங்கள் எங்கு இருந்தாலும், கடமைகளை, கவனமாகவும், ஆத்மார்த்தமாகவும் ஆற்ற வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்தால், அவையே , இன்றியமையாதவையான பகுத்தறிவு, மற்றும் பற்றின்மையை உங்களுக்குத் தந்து விடும்.
எந்தச் செயலில் ஈடுபடுவதற்கு ,வெகு முன்பாகவே பகுத்தறியும் ஒருவர், அவரது செயல்பாடு மற்றும் நடத்தையில்,இயல்பாகவே தார்மீகமாக இருப்பார் - பாபா