azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 03 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 03 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
God has endowed you with a body and so every limb and sense-organ is worthy of reverent attention. Each must be used for His glory. The ear must exult when it gets a chance to hear the wonderful tales of God. The tongue must exult when it can praise Him. Else, your tongue is as effective as that of frogs on the marshy bank which croak day and night! An animal (pasu) fears; a beast (mriga) terrifies! Being afraid of someone or something is an animal tendency and bullying others is a demonic tendency. You should have neither! Your human body is gifted to you for a grand purpose – to realise the Lord within. If you own a fully loaded car in good running condition, would you keep it in the garage? Would you not drive it to where you need to go? So too, learn to use the faculties of body, senses, intellect, and mind, and achieve your goal! (Divine Discourse, Feb 18, 1966)
இந்த உடல் இறைவன் உங்களுக்கு அளித்த ஒன்று; எனவே, இதன் ஒவ்வொரு அங்கமும்,புலனும் , பயபக்தியுடனான கவனத்திற்குத் தகுதியானவை. ஒவ்வொன்றும் அவனது மாட்சிமைக்காகப் பயன் படுத்தப் பட வேண்டும். இறைவனது அதிசயமான கதைகளைக் கேட்கும் வாய்ப்புக் கிடைக்கும் போது, செவிகள் உவகை கொள்ள வேண்டும். அவனைப் போற்றிப் புகழும் போது, நாக்கு பேருவகை கொள்ள வேண்டும்.இல்லை எனில், உங்களது நாக்கு, இரவும் பகலும் கத்திக் கொண்டு இருக்கும் சதுப்பு நிலத் தவளையைப் போன்றதே! ஒரு பசு அஞ்சும்; ஒரு மிருகம் அச்சுறுத்தும் ! எவரையாவதோ அல்லது எதையாவதோ கண்டு அஞ்சுவது பசுவின் குணம்; பிறரை மிரட்டுவது ஒரு அசுர குணம். உங்களிடம் இரண்டும் இருக்கக் கூடாது ! உங்களது மனித உடல் ஒரு மகத்தான குறிக்கோளுக்காக உங்களுக்குப் பரிசாக அளிக்கப் பட்டுள்ளது – உள்ளுறையும் இறைவனை, உணருவதற்காக. நீங்கள் ஒரு நன்கு ஓடக்கூடிய சிறந்த காரை வைத்துக் கொண்டு, அதை கராஜிலேயேவா வைத்திருப்பீர்கள் ? நீங்கள் எங்கு செல்ல வேண்டுமோ, அங்கு செல்ல அதை ஓட்டிச் செல்வீர்கள் அல்லவா? அதைப் போலவே, உங்கள் உடல், புலன்கள், புத்தி மற்றும் மனதைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டு, உங்களது குறிக்கோளை அடையுங்கள் !