azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 02 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 02 Nov 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
In all countries the emphasis is on the standard of life, not on the quality of living. Once you turn towards the path of worldly happiness, you will be led on and on to greater and greater discontent, competition, pride and jealousy. Just stop for a moment and examine your own experience; whether you are happier when you grow richer, and whether you get more peace as and when your wants are satisfied. Then you will bear witness to the truth that an improved standard of living is no guarantee of happiness. Neither do education, the mastery of information or the acquisition of skills guarantee mental equanimity. As a matter of fact, everywhere you find the educated man more discontented and more competitive than the uneducated. So the re-establishment of righteousness (dharma), is the urgent need in all parts of the world today. (Divine Discourse, Apr 23, 1961.)
IF THERE IS RIGHTEOUSNESS IN THE HEART, THERE WILL BE BEAUTY IN CHARACTER. IF THERE IS BEAUTY IN CHARACTER, THERE WILL BE HARMONY IN THE HOME. - BABA
அனைத்து நாடுகளிலும், வாழ்க்கைத் தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறதே அன்றி, வாழும் பண்பிற்கு அல்ல.நீங்கள் ஒரு முறை உலகியலான சுகம் எனும் பாதையில் திரும்பி விட்டால், மேலும் , மேலும் அதிகமான அதிருப்தி, போட்டி, தற்பெருமை மற்றும் பொறாமைக்கு இட்டுச் செல்லப் படுவீர்கள். ஒரு கணம் நின்று உங்களது அனுபவத்தை , அதாவது நீங்கள் அதிகப் பணக்காரராக ஆகும் போது, அதிக சந்தோஷமாக இருக்கிறீர்களா; உங்களது தேவைகள் பூர்த்தி ஆனபோது நீங்கள் அதிக சாந்தி அடைகிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள் . ஒரு முன்னேறிய வாழ்க்கைத் தரம், சந்தோஷத்தை உறுதி செய்ய முடியாது என்ற உண்மையை நீங்களே உணர்வீர்கள். அதைப் போலவே, படிப்போ, விஷயங்களில் பாண்டித்யமோ அல்லது திறன்களைப் பெறுவதோ, சமச்சீரான மனநிலைக்கு உத்திரவாதம் அளிக்க முடியாது. உண்மையில், எங்கு பார்த்தாலும், படிப்பறிவு இல்லாதவரை விட, மெத்தப் படித்தவர்களே, அதிகமான அதிருப்தி மற்றும் போட்டி மனப்பான்மை உடையவர்களாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். எனவே, உலகனைத்திலும், தர்மத்தை புனருத்தாரணம் செய்வதே, இன்றைய அவசரமான தேவை ஆகும்.
இதயத்தில் தர்மம் இருந்தால், குணநலனில் அழகிருக்கும். குணநலனில் அழகிருந்தால், குடும்பத்தில் இசைவு இருக்கும்- பாபா