azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 28 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 28 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
The deha, the body is but an instrument to realise the Dehi or the Indweller. Realising your oneness with the Dehi must be your deeksha or steady pursuit. And this pursuit must express itself in actual practice as discipline and training of the senses (Nishtha and Sikshana). Water and fire individually cannot move a train; they must both cooperate to produce a third thing - steam. The steam moves the engine forward. Kerosene and air must both unite to form the gas which ignites in the petromax lamp to give light. Yoga is explained as chitta vritti nirodha - the curbing of mental agitations. It also means the Union which is possible when mental agitations are curbed and equanimity is achieved. Devotion, wisdom or action (Bhakti, Jnana or Karma), must all lead to the achievement of equanimity; otherwise, they are simply a sham. The curbing of the mind will take you to the winning post. (Divine Discourse, Jan 29, 1965.)
THE PRIMARY GOAL OF EVERY HUMAN BEING IS TO REALISE THEIR INHERENT DIVINITY AND
REDEEM THEIR LIFE BY THAT REALISATION. - BABA
இந்த உடல் (தேஹ), உள்ளுறையும் தெய்வீகத்தை ( தேஹி ) உணருவதற்கான, கருவியே அன்றி வேறில்லை. தேஹியுடன் உங்களுக்கு உள்ள ஒருமையை உணருவதே உங்களது தீக்ஷையாக ( உறுதியான முயற்சி) இருக்க வேண்டும். இந்த முயற்சி, புலன்களின் கட்டுப்பாடும், பயிற்சியுமாக ( நிஷ்டா மற்றும் சிக்ஷணா ), நடைமுறையில் தானே வெளிப்பட வேண்டும். தண்ணீரும், நெருப்பும் தனித் தனியாக ஒரு ட்ரெயினை நகர்த்த முடியாது; இரண்டும் ஒத்துழைத்து மூன்றாவதான நீராவியை உருவாக்க வேண்டும்.நீராவி, இஞ்சினை முன் நோக்கி நகர்த்துகிறது. ஒளியைத் தரும், பெட்ரோமாக்ஸ் விளைக்கை ஏற்றுவதற்கான ஆவியை, மண்ணெண்ணையும், காற்றும் ஒன்றிணைந்து உருவாக்குகின்றன. யோகம் ‘’ சித்த விருத்தி நிரோதா’’ – அதாவது மன அலைச்சல்களை தடுப்பது, என்று விவரிக்கப் படுகிறது. மன அலைச்சல்கள் தடுக்கப் பட்டு, சமச்சீரான மனநிலையைப் அடையும் போது பெற வல்ல ஒன்றிணைப்பு என்றும் பொருள் படுகிறது. கர்ம, பக்தி அல்லது ஞானம் என்ற அனைத்தும், சமச்சீரான மனப்பாங்கை அடைவதற்கு இட்டுச் செல்ல வேண்டும்; இல்லை எனில் அவை அனைத்தும் வெறும் ஒரு பாசாங்கே. மனதை அடக்குவதே, வெற்றியின் குறிக்கோளுக்கு உங்களை இட்டுச் செல்லும்.
ஒவ்வொரு மனிதனின் தலையாய குறிக்கோள், தன்னுள் உறையும் தெய்வீகத்தை உணர்ந்து, தங்களது வாழ்க்கையை, அந்த உணர்வினால், மீட்டுக் கொள்வதே ஆகும்.- பாபா