azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 18 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 18 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Narakasura is present in everyone as lust, hate, greed and as fear and grief, which are against the very nature of humanity. Just as an umbrella with a silk cover cannot protect you from rain but the one with a waterproof cover can, so too in this storm-driven world incessantly flushed by torrential rain, an umbrella with desire-proof and anger-proof coating is very essential. There is great latent power inherent in everyone, and when that power is made explicit (vyakta), a human being deserves to be called individual (vyakti). When the latent qualities from within you manifest, the demons will automatically be destroyed. Your reality is Atma; your quality is bliss (ananda). Krishna is the Super or Omni Self (Paramatma) and Satyabhama (Krishna’s consort) represents the individual self (jiva). On this auspicious day, Paramatma destroys the evil propensities with the active collaboration of the individual self! Remember, the individual self can defeat evil with the active grace of the Lord. (Sathya Sai Speaks, Vol 3, Dec 1963.)
GOD'S GRACE IS READILY AVAILABLE THROUGH THE SACRED USE OF YOUR SENSES. - BABA
மனித குலத்தின் இயல்பிற்கே எதிரான தீய குணங்களான காமம், க்ரோதம், லோபம் பயம் மற்றும் துக்கமாக, நரகாசுரன் ஒவ்வொருள்ளும் இருக்கிறான்.எவ்வாறு, பட்டுத் துணியினால் ஆன ஒரு குடை உங்களை மழையிலிருந்து காக்க முடியாதோ; ஆனால் ஒரு நீர்உட்புகாத துணியினால் ஆன குடையினால் முடியுமோ, அவ்வாறே கன மழையினால் இடையறாது அலசப்படும் புயலில் அல்லாடும் இந்த உலகில், ஆசையையும், ஆத்திரத்தையும் உட்புக விடாத முலாம் பூசப்பட்ட ஒரு குடை அத்தியாவசியமாகிறது. தலை சிறந்த உள்ளுறையும் ஒரு சக்தி இயல்பாகவே ஒவ்வொருள்ளும் உள்ளது; அதை வெளிப்படுத்தும் ( வ்யக்தா ) போது தான், ஒருவர், தனி மனிதன் ( வ்யக்தி ) என அழைக்கப் படும் தகுதியைப் பெறுகிறார்.உங்களுள் உள்ளுறையும் குணங்கள் வெளிப்படும் போது,அசுரர்கள் தானாகவே அழிக்கப் பட்டு விடுகிறார்கள்.உங்களது உண்மை நிலை ஆத்மாவே; உங்களது குணம் ஆனந்தமே. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பரமாத்மா, அவரது துணைவியான சத்யபாமா ஜீவாத்மாவைக் குறிக்கிறார். இந்த மங்கள கரமான நாளில், ஜீவாத்மாவின் துணை கொண்டு பரமாத்மா தீய இயல்புகளை அழிக்கிறார்! ஒரு ஜீவாத்மா, தீமையை, செயல்திறன் கொண்ட இறை அருளால் வென்று விட முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களது புலன்களை புனிதமான வழிகளில் பயன்படுத்தும் போது இறை அருள் , உங்களுக்காக தயாராகக் காத்திருக்கிறது - பாபா