azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 15 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 15 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

God loves the flower of peace (Shanti). This flower of peace should not be interpreted to mean that you should be silent towards whoever is attacking you or blaming you. It is not that at all! If you are unmoved and unperturbed in spite of anyone finding faults in you, that is real Shanti. If you can fill your heart with love, you will always be peaceful. Through our own bad qualities, we lose peace. With truthful thoughts, you will have peace. With untruthful thoughts, you lose peace. It is only when you are free from all thoughts that you can have true peace. Your own bad thoughts are responsible for all your pain and sorrow. Through good thoughts and ideas, you will become a sadhu (saint). Sadhu does not mean one who merely wears an orange robe, shaves the head and wears holy beads (Rudrakshas). Every person who has good thoughts and good ideas is a sadhu. (Divine Discourse, 12 May, 1981)
PEACE IS THE BEST TREASURE, WITHOUT WHICH POWER, AUTHORITY,
FAME AND FORTUNE ARE ALL DRY AND BURDENSOME. - BABA
இறைவன் சாந்தி புஷ்பத்தை விரும்புகிறான். இந்த சாந்தி புஷ்பத்தை, யாராவது உங்களைத் தாக்கினாலோ அல்லது குறை கூறினாலோ, நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும் , எனப் பொருள் கொள்ளக் கூடாது. அது அப்படியே அல்ல ! எவரும் உங்களில் குறை கண்டாலும் கூட, அதைப் பொருட்படுத்தாமலும், கலக்கமடையாமலும் நீங்கள் இருப்பதே உண்மையான சாந்தியாகும். நீங்கள் உங்கள் இதயத்தை ப்ரேமையினால் நிரப்பினால், நீங்கள் எப்போதும் சாந்தியுடன் இருப்பீர்கள்.நமது தீய குணங்களின் காரணமாகவே, நாம் சாந்தியை இழக்கிறோம். சத்தியமான சிந்தனைகளால், உங்களுக்கு சாந்தி கிடைக்கும். அசத்தியமான சிந்தனைகளால், நீங்கள் சாந்தியை இழக்கிறீர்கள். அனைத்து சிந்தனைகளும் இன்றி இருந்தால் மட்டுமே, உங்களுக்கு உண்மையான சாந்தி கிடைக்கும். உங்களது தீய சிந்தனைகளே, உங்களது அனைத்து துன்பம் மற்றும் துயரத்திற்குக் காரணம். நல்ல எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளின் மூலம் நீங்கள் ஒரு சாது ஆகி விடுவீர்கள். சாது என்றால், வெறும் ஒரு காவி வஸ்திரம் அணிந்து கொண்டு, மொட்டை அடித்துக் கொண்டு, ருத்ராக்ஷ மாலை அணிந்திருப்பவர் என்று பொருளல்ல. நல்லெண்ணங்களும், நற்சிந்தனைகளும் கொண்ட ஒவ்வொருவரும் ஒரு சாதுவே.
சாந்தியே மிகச் சிறந்த பொக்கிஷமாகும்;அது இன்றி பலம், பதவி,பெயர் ,புகழ் என்ற அனைத்தும், வரட்டுச் சுமையே- பாபா