azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 14 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 14 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Develop divine love (Prema) towards the Lord, the Embodiment of Supreme Divine Love. Never give room for doubts, hesitations and questions to test the Lord’s Love. “Why have my troubles not ended? How come this situation is happening to me?” Do not think that God does not care for you or He does not know you. You may not get what you want, when you want, but do not be under the impression that God does not love you or care for you. Do not get shaken in mind; never allow faith to decline. That will only add to the grief you already suffer from. Hold fast to your chosen deity – Shiva, Rama or Sai Baba. Do not lose the contact and company, for only when coal is in contact with the live embers, it can also become one. Cultivate nearness to Me in your heart and you will be rewarded with a fraction of Supreme Divine Love. (Divine Discourse, 10 Oct, 1964)
IF YOU HAVE NO STEADFASTNESS AND NO DEPTH OF FAITH, YOU CAN HAVE NO GRACE - BABA
உன்னத ப்ரேமையின் திருவுருவமான இறைவன் பால் தெய்வீக ப்ரேமையை வளர்த்துக் கொள்ளுங்கள் . இறைவனது ப்ரேமையை சோதிப்பதை பற்றிய சந்தேகங்கள் ,தயக்கங்கள் மற்றும் கேள்விகளுக்கு ஒரு போதும் இடம் கொடுக்காதீர்கள்." என்னுடைய துன்பங்கள் ஏன் தீரவில்லை? இப்படிப் பட்ட நிலைமை ஏன் எனக்கு ஏற்படுகிறது?". இறைவனுக்கு உங்களைப் பற்றிய அக்கறை இல்லை என்றோ அல்லது அவனுக்கு உங்களைத் தெரியாது என்றோ எண்ணாதீர்கள் .நீங்கள் வேண்டுவது உங்களுக்குக் கிடைக்காமலோ, எப்போது வேண்டுமோ அப்போது கிடைக்காமலோ இருக்கலாம், ஆனால் , இறைவன் உங்களை நேசிக்கவில்லை அல்லது அவனுக்கு உங்கள் மீது அக்கறை இல்லை என்றோ எண்ணாதீர்கள். மனதளவில் கலங்கி விடாதீர்கள்: ஒரு போதும் நம்பிக்கையைக் குறைய விடாதீர்கள். நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பத்தை அது மேலும் அதிகமாக்கும். நீங்கள் தேர்ந்து எடுத்துள்ள தெய்வத்தை- சிவனோ, ஸ்ரீ ராமனோ,அல்லது சாய் பாபாவோ- இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். இறைவனோடு உள்ள உறவு மற்றும் நட்பை விட்டு விடாதீர்கள்; ஏனெனில் கரி, கனலோடு ஒட்டி இருந்தால் தான், அதுவும் கனலாக முடியும். உங்கள் இதயத்தில் என்னுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்; உன்னத தெய்வீகப் ப்ரேமையின் ஒரு பங்கு உங்களுக்குக் கிடைக்கும் .
மன உறுதியும், ஆழ்ந்த நம்பிக்கையும் உங்களுக்கு இல்லை என்றால், நீங்கள் இறை அருளைப் பெற முடியாது - பாபா