azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 13 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 13 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Imagine your son and servant is at home. If your son is pilfering some things or developing bad habits, you will try and control him by correcting, scolding, and persuading him to return to good ways but will never take him and hand him over to the police – will you? On the other hand, if your servant steals a small spoon, at once, you will consider handing him over to the police, isn’t it? What is the inner significance from this situation? The reason for the difference in behavior is the narrow idea 'this boy is my son’. Because the servant does not belong to you, there is no consideration for forbearance and patience! Cultivate the broad idea 'everyone is mine', then, love, patience and forbearance will grow abundantly. (Divine Discourse, May 12, 1981)
LOVE, RESPECT, TOLERANCE, MUTUAL COOPERATION, FORBEARANCE
– THESE MUST FLOW FROM YOUR HEART TO ALL - BABA
உங்கள் வீட்டில், உங்கள் மகனும், ஒரு வேலைக்காரனும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் மகன் சில பொருட்களைத் திருடவோ அல்லது தீய பழக்கங்களை வளர்த்துக் கொள்ளவோ செய்தால், நீங்கள் அவனைத் திருத்தியும், திட்டியும், நல்ல வழிகளில் திரும்பிச் செல்வதற்கு அறிவுறுத்திக் கட்டுப் படுத்தவும் செய்வீர்களே அன்றி, அவனை ஒருபோதும் பிடித்து, போலீஸில் கொண்டு போய் கொடுக்கமாட்டீர்கள்- அப்படிச் செய்வீர்களா ? அதே சமயம் உங்கள் வேலைக்காரன் ஒரு சின்ன ஸ்பூனைத் திருடி விட்டால் கூட, உடனே, அவனைக் கொண்டு போய் போலீஸில் ஒப்படைக்க எண்ணுவீர்கள்- இல்லையா? இந்த சம்பவத்தின் உட்பொருள் என்ன? நடத்தையில் இந்த வித்தியாசத்திற்குக் காரணம் ‘’ இந்தப் பையன் என் மகன் ‘’ என்ற குறுகிய மனப்பாங்கே. அந்த வேலைக்காரன் உங்களுடையவன் இல்லை என்பதால், சகிப்புத் தன்மையோ அல்லது பொறுமையோ அங்கு ஒரு பொருட்டே இல்லை ! ‘’ அனைவரும் என்னுடையவரே ‘’ என்ற பரந்த மனப்பாங்கினை வளர்த்துக் கொள்ளுங்கள்; பின்னர் ப்ரேமை, பொறுமை மற்றும் சகிப்புத் தன்மை தாராளமாக வளரும்.
ப்ரேமை, கண்ணியம்,பொறுமை,பரஸ்பர ஒத்துழைப்பு, சகிப்புத் தன்மை – இவை உங்களது இதயத்திலிருந்து அனைவருக்கும் பெருக்கெடுத்து ஓட வேண்டும் - பாபா