azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 09 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 09 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Broadening your heart and making it bigger and bigger, you should make it as big as God Himself. A balloon, in its initial stage, is tiny. If you go on blowing air into it, it becomes bigger and bigger and later explodes. Though beginning with the ideas of 'I' and 'mine', if you ultimately move on to the place that, "all are mine and all are one”, gradually you will become broader in your vision, and then you burst and merge into God who is omnipresent. You should recognise the truth that your life should consist of making the journey from the position of 'I' to the position of 'We'. If all the time you simply stay in the place of 'I', you will remain where you are. This creation is like the bridge which connects man with God. 'I' is one hill. 'God' is another hill. The bridge between the two is the aspect of creation. If you break and destroy the bridge, you can never reach the destination. I am hoping that you plunge into society and do service, and thereby use the bridge to reach God. (Divine Discourse, May 12, 1981.)
YOU ARE ALL CASKETS OF DIVINE LOVE; SHARE IT WITH EVERYONE! EXPRESS DIVINE LOVE IN KIND WORDS AND ACTS OF SERVICE DONE WITH COMPASSION. - BABA
இதயத்தை விசாலமாக்கிக் கொண்டு, அதை மேலும் மேலும் விரிவாக்கி, நீங்கள் , அந்த இறைவன் அளவிற்கே, அதைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டும்.ஒரு பலூன் ஆரம்பத்தில் மிகவும் சிறிதானதே. நீங்கள் அதை ஊதிக் கொண்டே போனால், அது மேலும், மேலும் பெரிதாகி, பின்னர் வெடித்து விடுகிறது. ஆரம்பத்தில், ‘’நான்’’, ‘’ எனது’’ என்ற சிந்தனைகளோடு நீங்கள் தொடங்கினாலும், நீங்கள் இறுதியாக, ‘’அனைவரும் என்னுடையவரே, அனைவரும் ஒன்றே’’ என்ற நிலைக்கு முன்னேறினால், படிப்படியாக உங்களது திருஷ்டியில் நீங்கள் விசாலமானவராக ஆகி, பின்னர் நீங்கள் வெடித்து, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த இறைவனுடன் ஒன்றரக் கலந்து விடுவீர்கள். உங்களது வாழ்க்கை , ‘’ நான்’’ என்ற நிலையிலிருந்து, ‘’ நாம்’’ என்ற நிலைக்குச் செல்லும் ஒரு பயணமே என்ற உண்மையை, நீங்கள் உணர வேண்டும். நீங்கள் எப்போதும், வெறுமனே ‘’ நான் ‘’ என்ற நிலையிலேயே தங்கி விட்டால், நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருந்து விடுவீர்கள். சிருஷ்ட்டி என்பது, மனிதனை, இறைவனுடன் இணைக்கும் ஒரு பாலம் போன்றதாகும்.‘’ நான் ‘’ என்பது ஒரு குன்று, ‘’ இறைவன்’’ என்பது மற்றொரு குன்று. இந்த இரண்டையும் இணைக்கும் பாலமே சிருஷ்ட்டியின் அம்சமாகும். இந்தப் பாலத்தை உடைத்து, நீங்கள் அழித்து விட்டால், நீங்கள் ஒரு போதும் உங்களது குறிக்கோளை அடைய முடியாது. நீங்கள் சமூகத்தில் இறங்கி, சேவை செய்து, அதன் மூலம் இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி, இறைவனை அடைவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
நீங்கள் அனைவரும் ப்ரேமையின் பெட்டகங்கள்; அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தெய்வீக ப்ரேமையை, கனிவான வார்த்தைகளிலும், கருணை நிறைந்த சேவைப் பணிகளிலும் வெளிப்படுத்துங்கள் - பாபா