azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 01 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 01 Oct 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

You can redeem your life only when you understand wherefrom you came, your role presently and your destination. To accomplish this, first learn the righteous usage of your sense organs (Indriyas). For instance, consider your nostrils. They are designed to be used to breathe and smell objects and discard that is foul-smelling. Did you ever realise that the respiratory process also conveys a significant spiritual message when you inhale and exhale air every second? It contains the precious mantra, ‘So-hum’, which is called Hamsa Gayatri and is the essence of non-dualism (Advaita). So-Ham should remind you the message of identity between God (So) and you (Aham). Why do you forget this and instead of using your nose for sacred goals, use it to take snuff? By abusing, you make it the root-cause of various respiratory diseases. Most ailments people suffer today are due to the use of sense organs for improper purposes. Hence, recognise the critical role of the senses and use them righteously. (Divine Discourse, Oct 6, 1997)
THE SPIRITUAL PATH IS THE PATH OF DETACHMENT, OF SENSE CONTROL
AND RIGOROUS MIND TRAINING - BABA
நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்;தற்பொழுது உங்களது பங்கு என்ன, உங்களது முடிவு என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் மட்டுமே, உங்களது ஜன்மம் சாபல்யம் அடையும்.இதை அடைவதற்கு, முதன் முதலில், உங்களது புலன்களை தார்மீகமான முறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்.உதாரணத்திற்கு உங்களது நாசிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவை, சுவாசிப்பதற்கும், பொருட்களின் மணத்தை நுகருவதற்கும், துர்நாற்றம் கொண்டவற்றை ஒதுக்கித் தள்ளுவதற்காகவும் பயன்படுத்த ஏற்படுத்தப் பட்டுள்ளன. நீங்கள் ஒவ்வொரு கணமும் காற்றை உள்ளிழுக்கவும், வெளியேற்றவும் செய்யும் போது, சுவாசம் ஒரு ஆன்மீக உபதேசத்தையும் கூட அளிக்கிறது என்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அது , ஹம்ஸகாயத்ரி என்று அழைக்கப்படும், அத்வைத சிந்தாந்தத்தின் சாரமும், மிக விலை மதிப்புள்ள மந்திரமுமான ‘’ஸோ-ஹம்’’என்பதைக் கொண்டதாகும். ‘’ ஸோ- ஹம்’’, இறைவனுக்கும் ( ஸோ) உங்களுக்கும் ( ஹம்) உள்ள அடையாளத்தின் செய்தியை நினைவு படுத்த வேண்டும்.இதை மறந்து, புனிதமான குறிக்கோள்களுக்காக உங்களது மூக்கைப் பயன்படுத்தாது, அதை மூக்குப் பொடி போடுவதற்காக ஏன் பயன்படுத்துகிறீர்கள் ? முறைகேடாக பயன்படுத்துவதன் மூலம், அதைப் பல சுவாச சம்பந்தப் பட்ட வியாதிகளுக்கு மூல காரணமாக ஆக்கி விடுகிறீர்கள். இன்று மனிதர்கள் அவதிப்படும் பல வியாதிகளுக்கு, புலன்களைத் தவறாகப் பயன்படுத்துவதே காரணம். எனவே, புலன்களின் முக்கியமான பங்கைப் புரிந்து கொண்டு, அவற்றை தார்மீகமான வழிகளில் பயன்படுத்துங்கள்.
ஆன்மீகப் பாதை என்பது,பற்றின்மை, புலனடக்கம்
மற்றும் தீவிர மனப்பயிற்சியின் பாதையாகும் - பாபா