azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 30 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 30 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Swami frequently exhorts the devotees, “Lead your life’s journey with the help of human values.” Let your daily life be suffused with truth (Sathya), righteousness (Dharma), peace (Shanthi) and love (Prema). God is Truth (Atma). Dharma is the duty that every one of us must perform earnestly. Hence, discharge your dharma with truth. These two are in fact the only spiritual practice (Sadhana) you must undertake. These two alone will protect you in every way, all the time. They alleviate all sorrows and difficulties. No human being, during the course of his or her life’s sojourn in this physical world should give up truth and righteousness (Sathya and Dharma). Truth must be experienced in one’s heart, while righteousness has to be reflected in one’s deeds. Never forget, Love is God. Whatever activity you undertake with love, it becomes a success. (Divine Discourse, Vijayadashami, Oct 21, 2007.)
THOSE WHO ATTACH THEMSELVES TO THE ETERNAL DIVINE
ALONE CAN HOPE FOR ENDURING SUCCESS IN LIFE. - BABA
சுவாமி, பக்தர்களை அடிக்கடி, ‘’ உங்களது வாழ்க்கைப் பயணத்தை மனிதப் பண்புகளுடன் நடத்துங்கள் ‘’ என்று அறிவுத்துகிறேன். உங்களது அன்றாட வாழ்க்கை, சத்யம், தர்மம், சாந்தி மற்றும் ப்ரேமையில் தோய்ந்திருக்கட்டும். இறைவனே சத்யம். தர்மமே, நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக நேர்மையுடன் ஆற்ற வேண்டிய கடமையாகும். எனவே, உங்களது தர்மத்தை, சத்யத்துடன் ஆற்றுங்கள். உண்மையில், நீங்கள் செய்ய வேண்டிய ஆன்மீக சாதனைகள் இவைகள் மட்டும் தான். இவை இரண்டு மட்டுமே, உங்களை எல்லா வழியிலும், எக்காலத்திலும் காத்திடும். இவை அனைத்து துக்கங்களையும், இன்னல்களையும் தீர்த்து விடும். எந்த ஒரு மனிதப்பிறவியும், ஆணோ அல்லது பெண்ணோ, அவர்களது இந்த உலக வாழ்க்கையில் சத்யத்தையும், தர்மத்தையும் கைவிடக் கூடாது. சத்யத்தை ஒருவர் இதயத்தில் உணர வேண்டும்;, தர்மம் ஒருவரது செயல்களில் ப்ரதிபலிக்க வேண்டும்.அன்பே இறைவன் என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள். நீங்கள் அன்புடன் எந்தச் செயலை மேற்கொண்டாலும், அது ஒரு வெற்றியையே தரும்.
பரப்ரம்மத்துடன் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் மட்டுமே வாழ்க்கையில் நிரந்தர வெற்றியை எதிர்பார்க்க முடியும் - பாபா