azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 28 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 28 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
The command of the Vedas, "Matru devo bhava; Pitru devo bhava (May the mother be your God; may the father be your God)", is repeated ad nauseum today, but, there is no sign of reverence towards the parents anywhere. A generation that does not respect and foster its parents is bound to end in disaster. Parents suffer great hardships and deny various comforts for themselves in order to put their children through school and college, but the children are ungrateful; they taunt and tease, they cause mental pain and physical hunger to their parents by ridiculing their habits and attitudes, and dismissing their advice with neglect. When the creators of your physical equipment and mental make-up are thus treated with sacrilege, how can one expect you to adore the Creator of the Universe, the God who provides for all? Honour your parents, so that your children learn to honour you. (Divine Discourse, Feb 15, 1969.)
THERE IS NO GOD HIGHER THAN YOUR MOTHER. - BABA
‘’மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ ( தாயே உனது தெய்வமாகட்டும்; தந்தையே உனது தெய்வமாகட்டும் ) என்ற வேத மந்திரங்கள் இந்நாளில் இடையறாது கோஷமிடப் படுகின்றன; ஆனால், பெற்றோர்களை மதிப்பது என்பதன் அறிகுறி எங்கும் காணப் படவில்லை. பெற்றோர்களைப் போற்றி, போஷிக்காத ஒரு தலைமுறை கண்டிப்பாகப் பேரழிவில் தான் முடியும். பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலச் செய்வதற்காக, கடினமான கஷ்டங்களை அனுபவிக்கவும், தங்களுக்கு என்று பல சௌகரியங்களை நிராகரித்துக் கொள்ளவும் செய்கிறார்கள் ; ஆனால் பிள்ளைகள் நன்றி மறந்தவர்களாக இருக்கிறார்கள்; அவர்களை அதட்டவும், இழிவு படுத்தவும் செய்கிறார்கள்; அவர்களது பழக்க வழக்கங்களை பரிகசிப்பதன் மூலம், தங்களது பெற்றோர்களுக்கு மனத் துன்பத்தை உண்டாக்கி, அவர்களை பட்டினி போடுவதோடு, அவர்களது அறிவுரைகளை துச்சமாக நிராகரிக்கிறார்கள். உங்களது உடல் மற்றும் மனதை உருவாக்கியவர்களது புனிதத்துவமே இவ்வாறு இழிவு படுத்தப் படும் போது, அனைவருக்கும் அனைத்தையும் அளித்து, இந்த பிரபஞ்சத்தையே உருவாக்கிய இறைவனை நீங்கள் எவ்வாறு போற்றுவீர்கள் என்று ஒருவர் எதிர் பார்க்க முடியும் ? உங்களது பிள்ளைகள் உங்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், உங்களது பெற்றோரை நீங்கள் மதியுங்கள்.
தாயினும் மேலான தெய்வம் வேறில்லை - பாபா