azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 27 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 27 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

When the mirror of the mind is soiled, it cannot perceive anything in its true state. This is the reason why man is unable to recognise his own true nature. Hence it is necessary to cleanse the mirror of impurities on it. How is this to be done? By regulating one's food and recreational habits. It is important to ensure that the food that is eaten is obtained by righteous means. Many of the ills which people suffer today are due to the fact that the things they consume have been got by unrighteous means. So to purify your mind the first prerequisite is pure food. But it may not always be possible to ensure purity in every meal, in every respect and at all times. To overcome this difficulty, make an offering of your meal to God and accept it as a gift from God. Before eating, when food is offered to God, it becomes Prasada (gift from God). All impurities in the food are thereby removed. This helps the process of cleansing the mind. This practice must be kept up continuously. (Divine Discourse, May 25, 1990)
SACRED THOUGHTS, VIRTUOUS QUALITIES AND NOBLE MINDED ACTIONS ARE BASIC FOUNDATIONS OF GOOD CHARACTER- BABA
மனக்கண்ணாடியில், தூசு படிந்திருக்கும் போது, எந்தப் பொருளின் உண்மை நிலையையும் அதனால் அறிய முடியாது. மனிதன் தனது உண்மையான சொந்த நிலையை உணர முடியாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.எனவே, இந்தக் கண்ணாடியின் மாசுக்களை நீக்குவது அவசியமாகிறது.இதை எவ்வாறு செய்வது?ஒருவரது உணவு மற்றும் உல்லாசப் பழக்கங்களை ஒழுங்கு படுத்துவதன் மூலமே. ஒருவர் உண்ணும் உணவு , தார்மீகமான வழிகளில் பெறப்பட்டதாக இருப்பதை உறுதி செய்வது முக்கியம்.இன்று மக்கள் அவதிப்படும் பல வியாதிகளுக்குக் காரணம், அவர்கள் உண்ணும் பல பொருட்களும் அதர்மமான வழிகளில் பெறப்பட்டதால் தான். எனவே, மனதைத் தூய்மைப் படுத்துவதற்கான முதல் தேவை தூய்மையான உணவாகும். ஆனால், எல்லா விதத்திலும், எல்லாக் காலங்களிலும், ஒவ்வொரு உணவின் தூய்மையையும் உறுதி செய்வது இயலாத காரியமாக இருக்கலாம். இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு,உங்கள் உணவை இறைவனுக்கு அர்ப்பணித்து, அதை இறைவனது ஒரு பரிசாக ஏற்றுக் கொள்ளுங்கள். சாப்பிடுவதற்கு முன், இறைவனுக்கு அர்ப்பணிக்கப் படும் உணவு, அவனது பிரசாதமாகி விடுகிறது. உணவில் இருக்கும் அனைத்து மாசுக்களும் இதனால் நீங்கி விடுகின்றன. இது மனதைத் தூய்மைப் படுத்தவும் உதவுகிறது. இந்தப் பழக்கத்தை இடையறாது கடைப் பிடிக்க வேண்டும்.
புனிதமான சிந்தனைகள்,சீரிய குணங்கள் மற்றும் உன்னத நோக்கம் கொண்ட செயல்கள் ஆகியவையே, நற்குணநலன்களின் அடிப்படை அஸ்திவாரமாகும் - பாபா