azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 21 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 21 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Thinking evil, speaking evil and seeing evil invariably leads to total ruin. For example, in Mahabharata, Duryodhana always had evil thoughts about the Pandavas and ultimately he brought destruction upon his entire family. The Ramayana had the story of Kaikeyi, who listened to the evil counsel of Manthara, and so lost not only her husband but the regard and love of her son Bharata. Learn to live in harmony and unity. Every organ in the body functions in cooperation with every other part. If your foot steps on a thorn, your eye feels the pain and sheds tears. If your eye notices a thorn or stone on the road, it warns the foot to avoid it. You must also develop the same sense of unity and share your joys and troubles as one family. There is nothing you cannot achieve with unity as your strength. With purity and unity, your genuine devotion to God will also grow. Make purity, unity, divinity your watchwords; they alone will ensure material and spiritual well-being. (Divine Discourse, May 22, 1986)
CONFLICT AND DISCORD IN THE WORLD WILL CEASE WHEN PEOPLE LEARN TO PRACTICE SENSE-CONTROL. - BABA
தீயவற்றைச் சிந்தித்து, தீயவற்றைப் பேசி,தீயவற்றைப் பார்ப்பது, எப்போதும் முழுமையான அழிவிற்கு இட்டுச் செல்லும்.உதாரணமாக, மஹாபாரதத்தில், துரியோதனன், பாண்டவர்களைக் குறித்து, எப்போதும் தீய எண்ணங்களைக் கொண்டிருந்தான்;முடிவில் அவன் தனது அனைத்து குடும்பத்தினருக்கும் அழிவைத் தேடித் தந்தான். ஸ்ரீமத் ராமாயணத்தில்,மந்தரையின் தீய போதனைகளைக் கேட்டதனால், தனது கணவரை மட்டும் அல்லாது, தனது மைந்தனான பரதனின் பரிவையும்,அன்பையும் இழந்த கைகேயியின் கதை உள்ளது. இசைவுடனும், ஒற்றுமையாகவும் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும், மற்ற உறுப்புக்களுடன் கூட்டுறவாக இயங்குகின்றன. உங்கள் பாதம் ஒரு முள்ளை மிதித்து விட்டால்,கண் அந்த வேதனையை உணர்ந்து, கண்ணீர் வடிக்கிறது. உங்கள் கண் , பாதையில் ஒரு முள்ளையோ அல்லது கல்லையோ பார்த்து விட்டால், அதைத் தவிர்க்கும் படி, கால்களுக்கு எச்சரிக்கிறது. நீங்களும் அதே மாதிரியான ஒற்றுமை உணர்வை வளர்த்துக் கொண்டு, உங்களது சந்தோஷங்களையும், துன்பங்களையும் ஒரே குடும்பம் போல பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒற்றுமை உங்கள் வலிமையாக இருக்குமானால், நீங்கள் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை. தூய்மை மற்றும் ஒற்றுமையினால், இறைவன் பால் உங்களது உண்மையான பக்தியும் கூட வளரும். தூய்மை, ஒற்றுமை மற்றும் தெய்வீகத்தை உங்களது தாரக மந்திரமாக ஆக்கிக் கொள்ளுங்கள்; அவை மட்டுமே, உங்களது உலகியலான மற்றும் ஆன்மீக க்ஷேமத்தை உறுதி செய்யும்.
மனிதர்கள் புலனடக்கத்தைக் கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ளும் போது, இந்த உலகின் சண்டை, சச்சரவுகள் நீங்கி விடும் - பாபா