azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 17 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 17 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Milk has butter in every drop; it makes it very nourishing. If you must see it as a separate concrete entity, you must boil the milk, cool it, add sour curd, wait for hours for it to curdle, then churn it, and roll the butter that floats into a ball. God is in every being, in fact in every atom of the Universe; it is because they exist, we can recognise and enjoy Him. To see God and experience Him, work in the spirit of love; this will lead you on to worship. Work without any regard to the proportion of benefit you derive from it, work since it is your duty, work since you love to work, work earnestly, strictly and sincerely since that is the way you can offer gratitude to God for the skills He has endowed upon you. Then you will certainly experience His Grace and Glory. (Divine Discourse, Jan 1, 1971)
Wisdom is the recognition of the immanence of the Divine in every being. - Baba
பாலின் ஒவ்வொரு துளியிலும் வெண்ணெய் இருக்கிறது; அதுவே பாலை மிகவும் போஷாக்கு உள்ளதாக ஆக்குகிறது.; நீங்கள் அதைத் தனியாகக் காண வேண்டும் என்றால், முதலில் நீங்கள் பாலைக் காய்ச்ச வேண்டும்,அதைக் குளிர வைக்க வேண்டும், புளித்த தயிரை அதில் சேர்க்க வேண்டும்,அது தோய்வதற்கு சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும், பின்னர் அதைக் கடைந்து ,அதில் மிதக்கும் வெண்ணையை ஒரு உருண்டையாக உருட்டி எடுக்க வேண்டும். இறைவன் ஒவ்வொரு ஜீவ ராசியிலும் இருக்கிறான் ; உண்மையில் அவன் , இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் உறைகிறான்; அவை உயிருடன் இருப்பதால் தான் ,நாம் அவனை உணர்ந்து , மகிழ முடிகிறது. இறைவனைக் கண்டு ,அனுபவிப்பதற்கு , பிரேமை உணர்வுடன் செயலாற்றுங்கள்; அதுவே உங்களை ஆராதனைக்கு இட்டுச் செல்லும். உங்களுக்கு அதனால் கிடைக்கும் ஆதாயத்தைப் பற்றிப் பொருட்படுத்தாமலும் ,அது உங்களது கடமை என்பதாலும், பணி புரிவதை நீங்கள் விரும்புவதாலும் , ஆர்வத்தோடும், கடுமையாகவும் , நேர்மையாகவும் செயலாற்றுங்கள்; ஏனெனில் , இறைவன் உங்களுக்கு அளித்துள்ள ஆற்றல்களுக்கு ,நீங்கள் நன்றி செலுத்தும் முறை அதுவே . பின்னர் ,கண்டிப்பாக இறைவனது அருளையும் , மகிமையையும் நீங்கள் அனுபவிப்பீர்கள்.
ஒவ்வொரு ஜீவராசியிலும்,அங்கிங்கெனாதபடி எங்கும் இறைவன் உறைகிறான் என்பதை உணர்வதே ஞானமாகும்- பாபா