azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 13 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 13 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Consider this loudspeaker which has the power to broadcast sound. Someone must have produced it, isn’t it? Who could have created it? Someone with the knowledge and skill to produce such a device. They may not be visible to you, but they exist, perhaps in Germany or Switzerland or Japan. Similarly for everything you enjoy in daily life, be it the television or the watch or any other gadget, there is a creator. But we are also seeing objects which are beyond human capacity. The sky, the stars that twinkle, the Sun and the Moon which illumine the world! Can any ordinary person create these? The supreme power which has the capacity to create such marvellous things has been described by the Vedas as Aprameya, which means, One who is beyond all proofs and all limitations. God cannot be described in words. Your primary objective must be to seek to understand this Infinite Power. (Divine Discourse, Mar 1, 1981)
PRAYER ALONE MAKES LIFE HAPPY,HARMONIOUS AND WORTH LIVING IN THIS UNIVERSE- BABA
ஓசையை அதிகப் படுத்திப் பரப்பும் சக்தியைக் கொண்ட ஒலிபெருக்கியை எடுத்துக் கொள்ளுங்கள்.யாரோ ஒருவர் அதை உருவாக்கி இருக்க வேண்டும் அல்லவா?அதை யார் உருவாக்கி இருக்கக் கூடும்?இப்படிப் பட்ட ஒரு கருவியை உருவாக்கும் அறிவும், திறனும் கொண்ட ஒருவரே. அவர்கள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் அவர்கள் ஒருவேளை ஜெர்மனியிலோ அல்லது சுவிட்ஸர்லாந்திலோ அல்லது ஜப்பானிலோ இருக்கிறார்கள்.அதைப் போலவே, நீங்கள் அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும், அது டெலிவிஷனோ அல்லது கடிகாரமோ அல்லது வேறு ஏதாவது ஒரு கருவியோ, அதைப் படைத்தவர் ஒருவர் இருப்பார். ஆனால், நாம், மனிதத்திறனுக்கு எல்லாம் அப்பாற்பட்ட சில பொருட்களையும் கூடக் காண்கிறோம்.வானம், கண் சிமிட்டும் விண்மீன்கள், உலகிற்கே ஒளி ஊட்டும் சூரியன் , சந்திரன் ஆகியவை ! ஏதாவது ஒரு சாதாரண மனிதன் இவற்றைப் படைத்திருக்க முடியுமா? இந்த அற்புதமான பொருட்களைப் படைக்கும் திறன் கொண்ட தலைசிறந்த அந்த சக்தி, வேதங்களால், அனைத்து பிரமாணங்களுக்கும், வரையறைகளுக்கும் அப்பாற்பட்டது என்ற பொருள் கொண்ட ‘’அப்ரமேயா’’ என்று வர்ணிக்கப் படுகிறது. இறைவனை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இந்த எல்லையற்ற சக்தியைப் புரிந்து கொள்ள விழைவதே உங்களது முதற் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இந்த பிரபஞ்சத்தில், பிரார்த்தனை மட்டுமே வாழ்க்கையை சந்தோஷமானதாகவும், இசைவானதாகவும்,
வாழ உகந்ததாகவும் ஆக்குகிறது - பாபா