azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 11 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 11 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not grieve that the Lord is testing you and putting you through the ordeal of undergoing the tests, for it is only when you are tested that you can assure yourself of success or become aware of your limitations. You can then concentrate on the subjects in which you are deficient and pay more intensive attention, so that you can pass in them too when you are tested again. Don’t study for the examination at the last moment; study well in advance and be ready with the needed knowledge as well as the courage and confidence born out of that knowledge and skill. What you have studied well in advance must be rolled over and over in the mind just before the examination; that is all that should be done. This is the pathway to victory. (Divine Discourse,Sivarathri, March 1963)
REMOVE THE ROOTS OF WEED OF EGOISM FROM THE FIELD OF YOUR HEART
- THAT IS ENOUGH SADHANA -BABA
இறைவன் உங்களை சோதிக்கிறான் என்றோ அல்லது சோதனைகளின் துன்பத்திற்கு உங்களை ஆளாக்குகிறான் என்றோ வேதனைப் படாதீர்கள்; ஏனெனில் நீங்கள் சோதிக்கப் பட்டால் தான், நீங்கள் உங்களுக்கே வெற்றியை உறுதி செய்து கொள்ளவோ அல்லது உங்களது குறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ முடியும்.அதன் பின்னர், உங்களுக்குத் திறமை குறைவாக இருக்கும் பாடங்களில் மனதைக் குவித்து, அதில் தீவிர கவனம் செலுத்துவதன் மூலம், மறுபடியும் சோதிக்கப் பட்டால், அந்தப் பரீட்சையில் தேர்ச்சி பெற முடியும். பரீட்சைக்காகக் கடைசி நேரத்தில் படிக்காதீர்கள்; முன்னதாகவே நன்றாகப் படித்து,தேவையான அறிவு, மற்றும் அந்த அறிவு மற்றும் திறமையினால் கிடைக்கும் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன், தயாராக இருங்கள். நீங்கள் முன்னதாகவே நன்றாகப் படித்ததை, பரீட்சைக்கு முன்பு, திரும்பத் திரும்ப மனதில் புரட்டிப் பார்க்க வேண்டும்; நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அது மட்டுமே. அதுவே வெற்றிக்கான வழியாகும்.
உங்கள் இதயம் எனும் நிலத்திலிருந்து, அஹங்காரம் எனும் களையை, வேரோடு பிடுங்கி எறிந்து விடுங்கள் – அதுவே போதுமான ஆன்மீக சாதனையாகும் - பாபா