azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 10 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 10 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

All who aspire to be devotees must eschew attachment and aversion. Do not be proud if you are able to sing better or if your worship room is better decorated. There must be a steady improvement in your habits and attitudes; otherwise, spiritual discipline is a vain pastime. Your homes must be immersed in the highest peace, undisturbed by any streak of hatred or malice, pride, or envy. The moment you decide that the orchard in your mind is His, all fruits will be sweet; your seeking for refuge and protection (Saranagathi) will render all fruits acceptable to the Lord, so they cannot be bitter. And, for water, what can be purer and more precious than your tears — shed not in grief, but in rapture at the chance to serve the Lord and to walk along the path that leads to Him! No worship or penance can equal the efficacy of obedience - obedience to the command given for your liberation!- (Divine Discourse, Feb 08, 1963.)
Surrendering the fruits of your action
to the Lord is real sacrifice. - Baba
பக்தர்களாக இருக்க விழையும் அனைவரும், ராக, த்வேஷங்களைத் ( விருப்பு, வெறுப்புக்களை )தவிர்த்து விட வேண்டும். உங்களால் மிகச் சிறப்பாகப் பாட முடிகிறது அல்லது உங்களது பூஜை அறை மிக நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டுள்ளது என்பதால் கர்வம் கொள்ளாதீர்கள். உங்களது பழக்க,வழக்கங்கள் மற்றும் மனப்பாங்குகளில் ஒரு சீரான முன்னேற்றம் இருக்க வேண்டும்; இல்லை என்றால், ஆன்மீக சாதனை ஒரு வீணான பொழுது போக்கே. வெறுப்பு அல்லது வன்மம், தற்பெருமை அல்லது பொறாமை ஆகியவற்றின் எந்தச் சுவடாலும் பாதிக்கப் படாத, பிரசாந்தத்தால் உங்கள் இல்லங்கள் ஆழ்ந்திருக்க வேண்டும். உங்களது மனம் எனும் தோட்டம், இறைவனுடயது என்று நீங்கள் முடிவு செய்த அந்தத் தருணத்திலிருந்தே அதன் அனைத்து பழங்களும் இனிமையானதாகவே இருக்கும்; நீங்கள் அவனது சரணாகதியை நாடுவதே, அனைத்து பழங்களையும் இறைவனுக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதாக ஆக்கி விடுவதால்,அவை கசப்பாக இருக்க முடியாது. தீர்த்தத்தைப் பொறுத்த வரை, துக்கத்தில் அல்லாது, இறைவனுக்கு சேவை செய்வதற்கும், அவனை அடைவதற்கான பாதையில் செல்வதற்கும் கிடைத்துள்ள வாய்ப்பின் பேரானந்தப் பரவசத்தால் சொரியப்படும் கண்ணீரை விடத் தூய்மையான அல்லது விலைமதிப்பற்ற ஒன்று என்ன இருக்க முடியும் ! உங்களது ஆத்ம சாக்ஷாத்காரத்திற்காக இறைவன் இடும் ஆணைக்குப் அடிபணிவதன் பலாபலனை, எந்த ஆராதனை அல்லது தவமும் ஈடு செய்ய முடியாது !
உங்களது செயல்களின் பலன்களை இறைவனுக்கு
அர்ப்பணிப்பதே உண்மையான தியாகமாகும் - பாபா