azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 04 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 04 Sep 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

The people of Kerala follow the commands of the noble Emperor Bali even today. That is why the state has developed in several ways. There is no dearth of food and amenities for a happy living in Kerala. Of course, changes in people’s aspirations and lifestyle are taking place in recent times due to the impact of the Kali Yuga (the present era). But the core of their hearts and feelings remains the same. They still follow the vedic injunctions “Speak truth and follow righteousness (Sathyam vada, dharmam chara).” They respect elders and serve them with love and affection. What could be the reason for this? Love for God! It is a land where love for God exists even today. Those who have love for God naturally develop fear of sin. Consequently, such people will have a high degree of morality in society, which is very important for its orderly functioning. It is not enough to celebrate the Onam festival with religious fervour and devotion. You have to live up to these expectations of the noble emperor Bali. (Divine Discourse, Sep 2, 2009)
LOVE SEEKS NO REWARD; LOVE IS ITS OWN REWARD- BABA
கேரளத்து மக்கள், மஹாபலிச் சக்கரவர்த்தியின் கட்டளைகளை இன்றும் பின்பற்றுகிறார்கள்.அதனால் தான் அந்த மாநிலம், பல வழிகளில் முன்னேறியுள்ளது. கேரளாவில் ஒரு சந்தோஷமான வாழ்க்கைக்குத் தேவையான உணவு மற்றும் வசதிகளுக்கு எந்தக் குறைவும் இல்லை.இருந்த போதும், கலி யுகத்தின் தாக்கத்தால், தற்காலத்தில், மக்களது அபிலாஷைகளிலும், வாழ்க்கை முறைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றன. ஆனால், அவர்களது இதயங்கள் மற்றும் உணர்வுகளின் மூலக் கரு அதே மாதிரியாகவே இருக்கிறது. அவர்கள் இப்போதும் கூட , வேதங்களின் ஆணைகளான , ‘’ உண்மையே பேசுங்கள், தர்மத்தைக் கடைப்பிடியுங்கள் ( சத்யம் வத, தர்மம் சர)’’ என்பதைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் பெரியவர்களை மதித்து, அவர்களுக்கு ப்ரேமை மற்றும் பரிவுடன் சேவை புரிகிறார்கள்.இதற்கான காரணம் என்னவாக இருக்கும்? இறைவன் பால் கொள்ளும் அன்பே !இன்றும் கூட, இறைவன் பால் அன்பு கொண்டுள்ள நாடாக அது இருக்கிறது. இறைவன் பால் அன்பு கொண்டுள்ளவர்கள், இயற்கையாகவே பாவம் செய்ய அஞ்சுவார்கள். அதன் விளைவாக, இப்படிப் பட்ட மக்கள் சமுதாயத்தில் மிக உயர்ந்த நல்லொழுக்கத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள்; ஒரு சமுதாயம் முறையாக இயங்குவதற்கு முக்கியமான தேவை அதுவே. ஓணம் பண்டிகையை, மதஉணர்வு மற்றும் பக்தியுடன் கொண்டாடினால் மட்டும் போதாது. சீரிய மஹாபலிச் சக்கரவர்த்தியின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்றவாறு நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும்.
ப்ரேமை எந்த வெகுமதியையும் நாடுவதில்லை;
ப்ரேமையே, அதன் வெகுமதியாகும் - பாபா