azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 27 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 27 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Those who are trying to build the human community on a foundation of wealth (dhana), are building on sand; those who seek to build it on the rock of righteousness (dharma) are the wise. Dharma moolam idham jagath: Righteousness and duty is the root of this world. Obey it and you are happy. The evil man is a coward, haunted by fear. He has no peace within him. Respect for the parents, who started you in life and brought you into this world to gather the vast and varied treasure of experience, is the first lesson that Dharma teaches. Gratitude is the spring which feeds that respect. It is a quality that is fast disappearing in the world today. Respect for parents, teachers, elders and the wise are all on the decline. People talk loud and long in all kinds of platforms about right conduct, love, peace, compassion, truth, etc. and these get published in the newspaper next day, and there their purpose ends. Put into practice at least a fraction of what you preach. (Divine Discourse, Feb 3, 1964)
LEARN TO RESPECT ALL. ONLY THEN WILL YOU EARN THE GRACE OF THE DIVINE WHO IS THE DWELLER IN ALL BEINGS- BABA
செல்வத்தை ( தனம்) அஸ்திவாரமாகக் கொண்டு, மனித குலத்தை நிர்மாணிக்க முயல்பவர்கள், மண்ணில் வீடு கட்டுபவர்களைப் போன்றவர்கள்; தர்மம் ( தர்ம ) எனும் பாறையின் மீது கட்ட முனைபவர்களே புத்திசாலிகள்.தர்ம மூலம் இதம் ஜகத் –தர்மமும், கடமையுமே இந்த உலகின் ஆணிவேர்கள். அதற்குப் பணிந்தால், நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். தீய மனிதன், பயத்தால் பீடிக்கப் பட்ட ஒரு கோழை.அவனுள் சாந்தி என்பதே கிடையாது.உங்களுக்கு வாழ்க்கையைத் தொடங்க வைத்து,பரந்து விரிந்த அனுபவப் பொக்கிஷத்தை நீங்கள் திரட்டுவதற்காக உங்களை இந்த உலகிற்குக் கொண்டு வந்த பெற்றோர்களை மதியுங்கள் என்பதே தர்மம் புகட்டும் முதல் பாடமாகும்.அந்த மரியாதையை வளர்க்கும் நீரூற்று, நன்றி உணர்வே ஆகும்.இன்று இந்த உலகில் அந்தப் பண்பே, விரைவாக மறைந்து கொண்டு வருகிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், முதியோர்கள் மற்றும் சான்றோர்களுக்கான மரியாதை அனைத்தும் வீழ்ச்சியடைந்து வருகிறது. மக்கள், பலவிதமான மேடைகளில் தர்மம், ப்ரேமை, சாந்தி,கருணை, சத்தியம் போன்றவற்றைப் பற்றி உரத்த குரலிலும், நீண்ட நேரமும் பேசுகிறார்கள்; அது மறுநாள் பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப் படுகிறது ; அதன் குறிக்கோள் அத்துடன் முடிந்து விடுகிறது. நீங்கள் உபதேசிப்பதில் குறைந்த பட்சம் ஒரு சிறு பகுதியையாவது, நீங்கள் கடைப்பிடியுங்கள்.
அனைவரையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் பின்னரே, அனைத்து ஜீவராசிகளின் உள்ளும் உறையும் தெய்வத்தின் அருளை நீங்கள் பெறுவீர்கள் - பாபா