azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 19 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 19 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Many people waste time discussing the superiority of one path over another, especially between karma, bhakti and jnana margas. These three paths - Work, Worship and Wisdom - are complementary, not contradictory. Work is like the feet, Worship, the hands, and Wisdom, the head. These three must co-operate. Bhakti marga is the name given to the path of surrender to the Lord's will (saranagathi), the merging of the individual will in the Divine Will. Lakshmana is the classic example of this spirit of surrender that saves. Once during his exile in the forest, Rama asked Lakshmana to put up a thatched-hut on a site of his choice. Lakshmana was shocked and was struck down with grief. He pleaded with Rama: "Why do you ask me to select the site? Don't you know that I have no will of my own. You decide and I obey; you command, I carry out the order." That is real surrender, acquired by constant practice of detachment. (Divine Discourse, Jan 11,1966)
YOUR LIFE MUST BE BASED ON THE PRINCIPLE OF SURRENDER TO DIVINE - BABA
பலர், எந்த மார்க்கம் உயர்ந்தது என்பதைப் பற்றி, அதிலும் குறிப்பாக கர்ம, பக்தி, ஞான மார்க்கங்களைப் பற்றி, விவாதிப்பதில் நேரத்தை வீணாக்குகிறார்கள். இந்த மூன்று மார்க்கங்களுமே ஒன்றுக்கொன்று ஈடானவையே அன்றி, முரணானவை அல்ல. கர்ம மார்க்கம் பாதங்களைப் போன்றது; பக்தி மார்க்கம் கரங்களைப் போன்றது,; ஞான மார்க்கம் சிரசைப் போன்றது.இந்த மூன்றும் ஒத்துழைத்தே ஆக வேண்டும். இறைவனது ஸங்கல்பத்திற்கு, சரணடைந்து, தனி மனிதனின் ஸங்கல்பத்தை, இறைவனது ஸங்கல்பத்தோடு ஒன்றரக் கலந்து விடச் செய்யும் மார்க்கத்திற்கு இடப்பட்டுள்ள பெயரே பக்தி மார்க்கம். ஒருவரைக் காக்கும் இந்த சரணாகதி உணர்விற்கு லக்ஷ்மணனே மிகச் சிறந்த உதாரணம். ஒரு முறை கானக வாசத்தின் போது, ஸ்ரீராமர், லக்ஷ்மணரை, அவருக்குப் பிடித்த ஒரு இடத்தில் ஒரு குடிசையைக் கட்டச் சொன்னார். லக்ஷ்மணர் பதறிப் போய், துக்கத்தில் ஆழ்ந்து விட்டார். அவர் ஸ்ரீ ராமரிடம், ‘’ என்னை எதற்காக ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறீர்கள் ? எனக்கென்று ஒரு ஸங்கல்பம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?நீங்கள் முடிவு செய்யுங்கள், நான் அதற்குக் கீழ்ப்படிகிறேன். நீங்கள் ஆணையிடுங்கள், நான் அதை நிறைவேற்றுகிறேன் ‘’ என்றாராம். பற்றின்மையை இடையறாது கடைப்பிடிப்பதன் மூலம் பெறப்படும் இதுவே உண்மையான சரணாகதியாகும்.
உங்களது வாழ்க்கை, தெய்வத்திடன் பரிபூரண சரணாகதி என்ற கோட்பாட்டை ஆதாரமாகக் கொண்டு இருக்க வேண்டும் - பாபா