azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 16 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 16 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
The Gopis knew the secret of spiritual surrender. Their worship was not tainted by any bargaining spirit. For those who bargain and crave for profit, for whom reverence is equated with returns, ‘sell’ homage for a unit satisfactory response. They are like paid servants, bargaining salary, overtime, bonus, etc. They calculate how much they are able to extract for the service rendered. On the other hand, be like a member of the family, a kinsman, a friend. Feel that you are Lord's very own. Then work will not tire you, it will be done much better, and in fact will yield more satisfaction. And what about the wages? The master will maintain you in bliss. What more can you aspire for? Leave the rest to Him. He knows best; He is all. The joy of having Him is enough reward. Live your lives on these lines and you will never suffer grief. “Na me bhaktah pranashyati - My devotees never suffer,” says Krishna. (Divine Discourse, Aug 19, 1965)
LOVE SEES ALL AS ONE DIVINE FAMILY- BABA
கோபிகைகள் ஆன்மீக சரணாகதியின் ரகசியத்தை அறிந்து இருந்தார்கள். அவர்களது பக்தி எந்த பேரம் பேசும் உணர்வாலும் களங்கப் படாததாக இருந்தது.பேரம் பேசி லாபத்திற்கு ஏங்குபவர்களும், பயபக்தியை வருவாய்க்கு சமமாகக் கருதுபவர்களும், ஒரு திருப்தி தரும் பலனுக்காக அஞ்சலியை விற்பவர்கள் ஆவார்கள்.அவர்கள், சம்பளம்,அதிக நேர வேலைக்கான கூடுதல் கூலி,போனஸ் ஆகியவற்றிற்காக பேரம் பேசும் சம்பளம் வாங்கும் வேலைக்காரரைப் போன்றவர்கள் . தாங்கள் செய்த வேலைக்கு எவ்வளவு பிடுங்கிக் கொள்ளலாம் என்று கணக்குப் பார்ப்பவர்கள். அப்படி இன்றி, குடும்பத்தில் ஒருவர் போலவும்,ஒரு உறவினன்,ஓரு நண்பன் போலவும் இருங்கள். நீங்கள் இறைவனுக்கே சொந்தமானவர்கள் என்று கருதுங்கள். பின்னர் எந்த வேலையும் உங்களுக்குக் களைப்பூட்டாது ,அது மேலும் நன்றாகச் செய்யப் படும், உண்மையில் அதிகமான திருப்தியைத் தரும். அப்படி என்றால் கூலி ? இறைவன் உங்களை பேரானந்தத்தில் இருந்திடச் செய்வான். அதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும்? மீதம் அனைத்தையும் அவனிடம் விட்டு விடுங்கள் .எது மிகச் சிறந்தது என்பதை அவன் அறிவான்; அவனே அனைத்தும் ஆவான். அவனைப் பெற்றிருப்பதால் கிடைக்கும் ஆனந்தமே போதுமான வெகுமதி ஆகும். உங்கள் வாழ்க்கையை இவ்வாறு நடத்துங்கள்: நீங்கள் ஒரு போதும் துன்பத்திற்கு ஆளாக மாட்டீர்கள் ." ந மே பக்தா ப்ரணஸ்யதி - எனது பக்தர்கள் ஒரு போதும் துன்பப் பட மாட்டார்கள் " என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
ப்ரேமை, அனைவரையும், ஒரே தெய்வீகக்
குடும்பமாகப் பார்க்கிறது - பாபா