azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 09 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 09 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
![Beloved Bhagawan Sri Sathya Sai Baba](/baba/2017/08-2017/htmls/photos/TFD 09.08.2017/baba1.jpg)
The conclusion of a Saptah (seven days long discourse) is called Samapti. But the term Samapti has a profound meaning for it too. It means, the attainment (Aapti) of Samam (Brahman or Divinity). That is the final fruit of listening, recapitulation and absorption (sravana, manana and nididhyasana) of spiritual lessons and discourses. In the worldly sense, it means the conclusion of a series of sessions; in the spiritual sense, it means transcending time! What is the sum and substance of all spiritual endeavour? It is that you must give up your pursuit of sensory objects in your seeking for lasting peace and joy. Material wealth brings along with it not only joy but grief as well. Accumulation of riches and multiplication of wants lead only to alternation between joy and grief. Attachment is the root of both joy and grief; detachment is the Saviour. [Divine Discourse - August 19, 1964]
PRACTICE DETACHMENT FROM NOW ON; PRACTICE IT LITTLE BY LITTLE, FOR A DAY WILL COME SOONER OR LATER WHEN YOU MUST GIVE UP ALL THAT YOU HOLD DEAR - BABA
ஏழு நாட்கள் நடத்தப் படும் சப்தாஹத்தின் முடிவு ஸமாப்தி எனப்படுகிறது. ஆனால் . இந்த வார்த்தைக்கு ஒரு ஆழ்ந்த பொருளும் உண்டு. அதாவது ,ஸமத்தை ( பிரம்மன் அல்லது தெய்வம் ) பெறுவது (ஆப்தி) என்பதாகும். அதுவே , ஆன்மீக பாடங்கள் மற்றும் உபன்யாசங்களைக் கேட்பது,அவற்றைப் பற்றி சிந்திப்பது மற்றும் அவற்றை உட்கிரஹிப்பதன் ( ஸ்ரவணம் , மனனம் மற்றும் நிதித்யாஸனம் ) இறுதிப் பலனாகும். உலகியலாகப் பார்த்தால்,ஒரு தொடர்ந்த அமர்களின் முடிவு என்று பொருள் படுகிறது.: ஆன்மீகமாகப் பார்த்தால் காலத்தைக் கடந்து நிற்பது என்று பொருள் கொள்ள வேண்டும் ! அனைத்து ஆன்மீக சாதனைகளின் ஒட்டு மொத்தப் பொருள் என்ன? உங்களது நிரந்தரமான சாந்தி, சந்தோஷங்களின் தேடுதலில் ,நீங்கள் புலனின்பங்களை நாடுவதை விட்டு விட வேண்டும் என்பதே ஆகும்.உலகியலான செல்வங்கள் அவற்றுடன் சந்தோஷத்தை மட்டும் அல்லாது ,துக்கத்தையும் கொண்டு வருகின்றன . செல்வங்களைக் குவிப்பதும், ஆசைகளைப் பெருக்கிக் கொள்வதும்,இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும் நிலைக்கே இட்டுச் செல்லும்.பற்றுதலே இன்பம், துன்பம் என்ற இரண்டிற்கும் மூல காரணமாகும்: பற்றின்மையே ரக்ஷகனாகும்.
இப்போதிலிருந்தே பற்றுதலை விடப் பழகிக் கொள்ளுங்கள்; கொஞ்சம்,கொஞ்சமாகப் பழக்கப் படுத்திக் கொண்டு வாருங்கள், ஏனெனில், என்றாவது ஒருநாள், நீங்கள் பிரியமானவை என்று பிடித்துக் கொண்டு இருக்கும் அனைத்தையும் விட்டு விட வேண்டி இருக்கும் - பாபா