azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 08 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 08 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Dhana (Money) is the currency of the world; Sadhana (spiritual practices) is the currency of the spirit. When self-styled devotees come to you with their lists and books seeking donations, do not offer them any money. Why do you need a hall to meditate or repeat the Lord’s Name (dhyana or namasmarana)? The presence of others with unlike intentions will more often be a hindrance rather than help; instead make your home a temple, meditate in your own shrine room. Sing bhajans lovingly in your own home! Above all, be an example to others through your conduct - practice soft loving and truthful speech, be humble, and show reverence to elders. Live with faith, steadfastness and truthfulness. That way you will bring more people into the fold of theism than by establishing societies, collecting donations and running temples. Remember, the Lord really cares for sincerity, simplicity and steady joy in the contemplation of His name and form; nothing else! [Divine Discourse - August 19, 1964]
WHEN YOU DEDICATE YOUR EVERY ACTION TO THE LORD,
YOU WILL RECEIVE ENDURING BLISS AS ITS REWARD - BABA
தனமே இந்த உலகின் செலவாணியாகும் நாணயம் என்றால் , ஆன்மீக சாதனமே ஆத்மாவின் நாணயமாகும் .தங்களைத் தாங்களே பக்தர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், அவர்களது பட்டியல் மற்றும் சந்தா புத்தகங்களுடன் நன்கொடைக்காக உங்களை அணுகினால், அவர்களுக்கு எந்தப் பணமும் அளிக்காதீர்கள். தியானம் செய்வதற்கோ அல்லது இறை நாமஸ்மரணை செய்வதற்கோ உங்களுக்கு ஒரு பொதுவான கூடம் எதற்கு? உங்களது நோக்கங்களுக்கு எதிர்மறையான சிந்தனை உள்ள மற்றவர்கள் இருப்பது , உதவியாக இருப்பதற்கு பதிலாக ஒரு உபத்திரவமாகவே இருக்கும். அதற்கு பதிலாக உங்கள் இல்லத்தையே ஒரு கோவிலாக ஆக்கி, உங்களது பூஜை அறையிலேயே தியானம் செய்யுங்கள் . உங்களது சொந்த இல்லத்திலேயே ப்ரேமையுடன் பஜனைகளைப் பாடுங்கள்! எல்லாவற்றிற்கும் மேலாக,உங்களது நடத்தையின் மூலம் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருங்கள் - இதமான , அன்பான ,உண்மையான பேச்சைக் கடைப்பிடித்து, பணிவுடனும் , பெரியோர்களிடம் மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறை நம்பிக்கை, மன உறுதி மற்றும் வாய்மையுடனான வாழ்க்கை நடத்துங்கள். கூட்டுறவு சங்கங்களை நிறுவுவது, நன்கொடைகளைத் திரட்டுவது, கோவில்களைக் கட்டுவது ஆகியவற்றை விட, அதிகமான மக்களை , இந்த வழியில், நீங்கள் ஆஸ்தீகத்திற்குள் கொண்டு வருவீர்கள் .அவனது நாம,ரூபங்களை தியானிப்பதில் , நேர்மை, எளிமை மற்றும் நிலையான ஆனந்தம் இருப்பதைத் தான் இறைவன் உண்மையில் விரும்புகிறானே அன்றி வேறு எதையும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் !
நீங்கள் உங்களது ஒவ்வொரு செயலையும் இறையார்ப்பணமாகச் செய்யும் போது, நிரந்தரமான பேரானந்தத்தை,
அதன் வெகுமதியாகப் பெறுவீர்கள் - பாபா