azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 06 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 06 Aug 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

To divest oneself of all contacts with others, and tread a lonely path is a sign of weakness, of fear and not of courage. Lively association alone produces morality, justice, compassion, sympathy, love, tolerance, equanimity and many other qualities that toughen and train the character, and mould the personality of an individual. Culture is the consequence of the co-mingling of hearts and heads. A group of individuals, who are charged with hatred or contempt towards each other, cannot produce any beneficial effect on any in the group; Sama-chintha, that is, a common outlook or rather a common inward-vision is the essential factor. Common belief systems, opinions and attitudes is key. This Sama-chintha must result in a flood of divine bliss that envelops and brightens an entire community. The consciousness that one is Divine and that everyone else is equally so, is the best bond for a community, that bliss is the best atmosphere to nurture and sustain communities. [Divine Discourse, April 1973]
LOVE WILL BE FOSTERED ONLY WHEN NON-VILOENCE IS PRACTICED - BABA
மற்றவர்களுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்து விட்டு, தனியாக ஒரு பாதையில் செல்வது என்பது ,பலஹீனம் மற்றும் அச்சத்தின் அறிகுறியே அன்றி தைரியத்தின் அறிகுறி அல்ல. உயிரூட்டம் உள்ள உறவு முறைகள் மட்டுமே, ஒருவரது பண்புகளை வலுப்படுத்தி, பயிற்சி அளிக்கும், நல்லொழுக்கம்,நீதி,கருணை, பரிவு, பிரேமை, சகிப்புத்தன்மை ,சமச்சீரான மனப்பாங்கு போன்ற பல குணங்களை ஏற்படுத்தி , ஒருவரது தனித்தன்மையை உருவாக்கும். கலாச்சாரம் என்பது பல இதயங்கள் மற்றும் சிந்தனைகளின் ஒன்றிணைப்பின் விளைவே. ஒருவருக்கு ஒருவர் கொள்ளும் துவேஷம் அல்லது வெறுப்பினால் உந்தப்பட்ட ஒரு மனிதக் கூட்டம் ,அந்தக் குழுவில் உள்ள எவருக்கும் நன்மையான விளைவுகளை ஏற்படுத்த முடியாது. சம சிந்தா , அதாவது ஒருமித்த நோக்கு அல்லது ஒருமித்த உள்ளார்ந்த நோக்கே அத்தியாவசியமான அம்சம் ஆகும் . ஒரே மாதிரியான நம்பிக்கைகள்,சிந்தனைகள் மற்றும் மனப்பாங்குகளே முக்கியமானவை.இந்த சம சிந்தா ,ஒருசமூகம் அனைத்திலும் பரவி, அதை பிரகாசமாக்கும் ஒரு பேரானந்தப் பெரு வெள்ளத்தில் முடிய வேண்டும். ஒருவர் தானும் தெய்வீகமே, அதே போல மற்றவர்களும் அதே அளவு அப்படியே என்ற விழிப்புணர்வே ,ஒரு சமுதாயத்தை இணைக்கும் மிகச் சிறந்த பிணைப்பாகும் :ஆனந்தமே,சமூகங்களை பராமரித்து தாங்கி நிற்பதற்கான மிகச் சிறந்த சூழ்நிலையும் ஆகும்.
அஹிம்சையைக் கடைப் பிடித்தால் மட்டுமே,
ப்ரேமையைப் பேணிக் காக்க முடியும்- பாபா